கடந்த 24 மணித்தியாலத்தில் புத்தளத்தில் அதிக மழை

Date:

கடந்த 24 மணிநேரத்தில் நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பலத்த மழை பெய்துள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதிகபட்சமாகப் புத்தளம் மாவட்டத்தின் கரந்திபோவல் பகுதியில் 195.7 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது.

இதற்கு அடுத்தபடியாக குளியாப்பிட்டிய பகுதியில் 193.0 மில்லிமீற்றர், இலுப்பைக்கடவை பகுதியில் 187.5 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சியும் பதிவாகியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதியில் ‘அர்னாப்’ (ARNAB) சூறாவளி தொடர்ந்து வலுவடைந்து வருவதாகவும், இதன் காரணமாக இலங்கைக்கு மறைமுகமான தாக்கம் ஏற்படும் என்றும் வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது.

இதன் காரணமாக நாட்டின் வடக்கு, மேல், சப்ரகமுவ, வடமேல், மத்திய மற்றும் தென் மாகாணங்களிலும், அநுராதபுரம் மாவட்டத்திலும் பலத்த மழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

spot_imgspot_img

More like this
Related

கே.என்.நேரு மீதான ரூ.634 கோடி ஊழல் வழக்கில் நடிகைக்கு தொடர்பா? – மறுப்பு தெரிவித்து விளக்கம்

முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு மீதான ரூ.634 கோடி ஊழல் வழக்​கில் சின்​னத்​திரை...

லிட்ரோ எரிவாயு சிலிண்டர் விலையில் மாற்றமில்லை

நவம்பர் மாதத்தில் லிட்ரோ சமையல் எரிவாயு விலையில் மாற்றம் ஏற்படுத்தப்படமாட்டாது என...

ஜம்மு கஷ்மீர் முதலமைச்சரின் திருமண அறிவிப்பு

காஷ்மீர் முதலமைச்சர் உமர் அப்துல்லா, பிரபல பத்திரிகையாளரும் ஒளிபரப்பாளருமான நிதி ரஸ்தானை...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்