ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் 40ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு அம்பாறை மாவட்டத்தில் ஏற்பாடு

Date:

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் 40ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு, அம்பாறை மாவட்டத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள “லீடர் அஷ்ரஃப் கிண்ணம்” மென்பந்து கிரிக்கெட் சுற்றுப் போட்டியின் சாய்ந்தமருது பிராந்திய ஏற்பாடுகள் தொடர்பான விசேட ஆயத்தக் கூட்டத்தில் கட்சியின் முக்கியஸ்தர்கள் பலரும் கலந்துகொண்டு உரையாற்றியுள்ளனர்.

சாய்ந்தமருது இளைஞர் காங்கிரஸ் காரியாலயத்தில் இடம்பெற்ற இக் கூட்டத்திற்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் சாய்ந்தமருது பிரதேச இளைஞர் அமைப்பாளரும், உயர் பீட உறுப்பினருமான எம். பாமி மன்சூர் தலைமை தாங்கினார்.

கூட்டத்தில் நிகழ்த்தப்பட்ட முக்கிய உரைகள் மற்றும் கருத்துகள்:

இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய இளைஞர் அமைப்பாளரும், முன்னாள் இராஜாங்க அமைச்சரும், பொத்துவில் பிரதேச சபையின் தவிசாளருமான எஸ்.எம்.எம். முஷாரப் மற்றும் கட்சியின் அரசியல் மற்றும் கலாச்சாரத் தலைவரும் உயர் பீட உறுப்பினருமான கலாநிதி முஃபிசால் அபூபக்கர், அம்பாறை மாவட்ட இளைஞர் காங்கிரஸ் அமைப்பாளர் அர்க்கானி மஜீத் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

கூட்டத்தில் உரையாற்றிய முன்னாள் மாநகர சபை உறுப்பினர் ஏ.சி. சமால்தீன், மர்ஹூம் எம்.எச். எம். அஷ்ரப் அவர்களால் உருவாக்கப்பட்டு 40 ஆண்டுகள் பூர்த்தியடைந்துள்ள ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியானது முஸ்லிம் சமூகத்தின் உரிமைகளுக்காக எத்தகைய தியாகங்களைச் செய்துள்ளது என்பதை இளைஞர்களுக்கு எடுத்துரைத்தார்.

மேலும், அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை ஆகிய மூன்று மாவட்டங்களை உள்ளடக்கி நடாத்தப்படவுள்ள இக்கிரிக்கெட் சுற்றுப் போட்டியில், சாய்ந்தமருது பிரதேசத்திலுள்ள திறமையான விளையாட்டுக்கழகங்களை ஒன்றிணைத்துச் சிறந்த அணியைத் தெரிவுசெய்வது குறித்தும், வெற்றியாளர்களுக்கு வழங்கப்படவுள்ள பணப்பரிசுகள் (வென்ற அணிக்கு ஒரு லட்சம் ரூபா மற்றும் மாகாண மட்டத்தில் 3 லட்சம் ரூபா) குறித்தும் விரிவாக விளக்கமளிக்கப்பட்டது.

எதிர்காலத்தில் இளைஞர்கள் கட்சியைப் பொறுப்பேற்று முன்னெடுக்க முன்வர வேண்டும் எனவும், அதற்கான பூரண ஆதரவை கட்சியின் மூத்த தலைமைகள் வழங்கத் தயாராக இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

சாய்ந்தமருது பிரதேச இளைஞர்களை ஒருங்கிணைத்து, இப்போட்டியை எதிர்வரும் நவம்பர் 10ஆம் திகதிக்கு முன்னர் வெற்றிகரமாக நடத்தி முடிப்பதற்காக விசேட குழு ஒன்றும் இக்கூட்டத்தில் உத்தியோகபூர்வமாக நியமிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

spot_imgspot_img

More like this
Related

பயங்கரவாதத் தடுப்புச் சட்டமூலத்திற்கு எதிரான மனுக்கள்: உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணை ஆரம்பம்…

அரசாங்கத்தினால் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள “அரசைப் பயங்கரவாதத்திலிருந்து பாதுகாக்கும் சட்டமூலம்” (Protection of...

ஊடகவியலாளர் நிமலராஜனின் 26ஆவது ஆண்டு நினைவேந்தல் யாழ்ப்பாணத்தில்!

படுகொலை செய்யப்பட்ட சிரேஷ்ட ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராஜனின் 26 ஆவது ஆண்டு...

அம்பாறை மாவட்டத்தில் சமையல் எரிவாயுக்கள் தட்டுப்பாடு – நுகர்வோர் பெரும் சிரமம்

நாடளாவிய ரீதியில் மீண்டும்   சமையல் எரிவாயு தட்டுப்பாடு நிலவுகிறமையினால்  அம்பாறை...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்