அக்குறணை, குருகொட சந்திக்கு அருகில் இடம்பெற்ற துரதிர்ஷ்டவசமான சாலை விபத்தொன்றில் நான்கு பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கட்டுப்பாட்டை இழந்த சிமெண்ட் கலவை லொறி (cement mixer truck) ஒன்று, வீதியில் சென்ற பல வாகனங்கள் மற்றும் பாதசாரிகள் மீது மோதியதாலேயே இந்த விபத்து நேர்ந்துள்ளது.
இந்த மோதலில் பலர் பாதிக்கப்பட்ட நிலையில், நான்கு பேர் உயிரிழந்துள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இந்தக் கடுமையான விபத்தினால் வீதியில் இருந்த சுமார் 10 வாகனங்கள் சேதமடைந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த விபத்தில் முச்சக்கர வண்டி ஒன்றும் மற்றுமொரு வாகனமும் முற்றாகச் சேதமடைந்தன; மேலும், மோட்டார் சைக்கிள் ஒன்று தீப்பிடித்து எரிந்தது.
சிமெந்து கலவை வாகன சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.




