தலவாக்கலை பொலிஸார், தனது 16 வயது மகளைப் பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் 39 வயதுடைய தந்தை ஒருவரைக் கைது செய்துள்ளனர்.
குறித்த மாணவி பல வாரங்களாகப் பாடசாலைக்குச் செல்லாததைத் தொடர்ந்து, இது குறித்து விசாரிக்குமாறு பாடசாலை அதிபர் தலவாக்கலை பொலிஸாரிடம் கோரிக்கை விடுத்திருந்தார்.
இக்கோரிக்கையின் அடிப்படையில், மாணவி பாடசாலைக்கு வராததற்கான காரணத்தை அறிய பொலிஸார் மாணவியையும், பெற்றோரையும் பொலிஸ் நிலையத்திற்கு வரவழைத்தனர். விசாரணையின் போது, தனது தந்தை தன்னை பாலியல் துஷ்பிரயோகம் செய்து வந்ததாக மாணவி பொலிஸாரிடம் வெளிப்படுத்தினார்.
இதனையடுத்து சந்தேகநபர் கைது செய்யப்பட்டு, நுவரெலியா மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் இன்று (15) வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.
மருத்துவப் பரிசோதனைகளுக்காக மாணவி நுவரெலியா ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.




