பலாலியில் 17ஆவது வாரமாகத் தொடரும் காணி விடுவிப்புப் போராட்டம்

Date:

பலாலி மக்களின் பூர்வீகக் காணிகளை விடுவிக்கக் கோரி முன்னெடுக்கப்பட்டு வரும் தொடர் போராட்டம், 17ஆவது வாரமாகவும் இன்று (11) பலாலிச் சந்தியில் இடம்பெற்றது.
கடுமையான வெயிலையும் பொருட்படுத்தாது தமது பூர்வீக நிலங்களை மீட்டெடுக்க வேண்டும் என்ற உறுதியுடன் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள், “இறந்தாலும் பலாலியில்தான் இறப்போம்” என உணர்வுபூர்வமாகத் தமது நிலைப்பாட்டை வெளிப்படுத்தினர்.
நீண்டகாலமாகத் தமது சொந்த நிலங்களிலிருந்து விலகியிருக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கும் பலாலி மக்கள், தமது காணிகளை மீளப் பெற்றுக்கொண்டு சொந்த மண்ணில் மீண்டும் குடியேறுவதற்கான கோரிக்கையைத் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், இன்றைய போராட்டத்தின்போது நிலவிய கடுமையான வெயிலுக்கு மத்தியில், போராட்டத்தில் கலந்துகொண்ட ஒருவர் திடீரென மயக்கமுற்று வீழ்ந்தார். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
எனினும், உடல் உபாதைகளையும் கடுமையான வெப்பத்தையும் எதிர்கொண்ட போதிலும், தமது கோரிக்கையைக் கைவிடாமல் மக்கள் போராட்டத்தில் தொடர்ந்து ஈடுபட்டனர்.
தமது பூர்வீக நிலங்களை மீட்டெடுத்து, சொந்த மண்ணில் மீண்டும் வாழ வேண்டும் என்ற எதிர்பார்ப்புடன் தொடர்ந்து போராடிவரும் பலாலி மக்களின் கோரிக்கைக்கு உரிய தீர்வு எப்போது கிடைக்கும் என்ற கேள்வி தற்போது மீண்டும் எழுந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
spot_imgspot_img

More like this
Related

மட்டக்களப்பில் கசிப்பு வியாபாரிகளுடன் பொலிஸாருக்கு தொடர்பா? சிறையில் கைதிக்கு மெத்தை வழங்கியதாகக் குற்றச்சாட்டு!

மட்டக்களப்பு திராய்மடு பிரதேசத்தில் பெண் ஒருவரின் கையை பிடித்து இழுத்து பாலியல்...

கல்முனை வைத்தியசாலை ஆடை விவகார வழக்கு: நவம்பர் 2ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு

கல்முனை வைத்தியசாலையின் ஆடை விவகாரம் தொடர்பில் கருத்து வெளியிட்டமைக்கு வைத்தியர் டாக்டர்...

மட்டக்களப்பு நீதிமன்றில் எம்.பி அருச்சுணா, உட்பட 3 பேரை எதிர்வரும் நவம்பர் 2 ம்திகதி ஆஜராகுமாறு உத்தரவு —

கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியர் குணசிங்கம் சுகுணன். நாடாளுமன்ற...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்