“இந்தியாவின் உண்மையான முதலாளி அம்பானியா?” – எலான் மஸ்க் கேள்வி

Date:

இந்தியாவில் ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள் இணையச் சேவையைத் தொடங்குவதில் தொடரும் தாமதம் காரணமாக, மத்திய அரசு மற்றும் முகேஷ் அம்பானி மீது எலான் மாஸ்க் கடும் விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.

எக்ஸ் தளத்தில் இது குறித்து பதிவிட்டுள்ள ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனர் எலான் மாஸ்க், “உலகின் 165-க்கும் மேற்பட்ட நாடுகளில் ஸ்டார்லிங்க் சேவைக்கான உரிமம் வழங்கப்பட்டுள்ளது. இந்திய அரசின் அனைத்து விதிமுறைகளுக்கும் சட்டங்களுக்கும் உட்பட்டு கடந்த 5 ஆண்டுகளாக நடவடிக்கை எடுத்து வரும் நிலையில், இன்னமும் எங்களுக்கு ஏன் அனுமதி உரிமம் வழங்கப்படவில்லை? இந்தியாவின் உண்மையான முதலாளி அம்பானிதானா?” என கேள்வியெழுப்பியுள்ளார்.

மேலும், தொலைதூர மற்றும் இணைய வசதியற்ற கிராமப்புற இந்தியப் பகுதிகளுக்குக் குறைந்த செலவில் இணையத்தை வழங்குவதே ஸ்டார்லிங்கின் நோக்கம் என்றும், ஏகபோக ஆதிக்கத்தைத் தக்கவைத்துக்கொள்ள முயலும் சில தொழிலதிபர்களின் தடையால் இந்திய மக்களுக்கே பெரும் இழப்பு ஏற்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.

எலான் மஸ்க்கின் குற்றச்சாட்டுகளை மத்திய தொலைத்தொடர்பு அமைச்சகம் முற்றிலுமாக மறுத்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ‘இந்தியாவின் தொலைத்தொடர்பு விதிமுறைகள் அனைத்தும் வெளிப்படையானவை மற்றும் பாரபட்சமற்றவை. ஸ்டார்லிங்க், ரிலையன்ஸ் ஜியோ மற்றும் பாரதி ஏர்டெல் ஆதரவு பெற்ற ஒன்வெப் ஆகிய மூன்று நிறுவனங்களுக்கும் அனுமதிகள் வழங்கப்பட்டுள்ளன.

ஆனால், சேவைத் தொடங்குவதற்கு முன்னதாக மேற்கொள்ளப்படும் உள்நாட்டுப் பாதுகாப்புத் தணிக்கை மற்றும் அலைவரிசை ஒதுக்கீட்டு நடைமுறைகள் தற்பொழுது மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் பரிசீலனையில் உள்ளன. அனைத்து நிறுவனங்களுக்கும் இந்த விதிமுறை பொதுவானதே’ என்று அரசு தெளிவுபடுத்தியுள்ளது.

எலான் மாஸ்க்கின் பதிவுகளை ரீட்வீட் செய்துள்ள மக்களவை எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, “இந்தியாவுக்கு வருக எலான்! மற்றொரு நபரையும் நீங்கள் கண்டறியும் வரை காத்திருங்கள்” சூசகமாக பதிவிட்டுள்ளார். அதற்குப் பதிலளித்த எலான் மாஸ்க், “நன்றி ராகுல், இது உண்மையிலேயே கவலையளிக்கும் விஷயம்தான்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

spot_imgspot_img

More like this
Related

பலாலியில் 17ஆவது வாரமாகத் தொடரும் காணி விடுவிப்புப் போராட்டம்

பலாலி மக்களின் பூர்வீகக் காணிகளை விடுவிக்கக் கோரி முன்னெடுக்கப்பட்டு வரும் தொடர்...

இலங்கைக் கடற்பரப்பில் தவிக்கும் ஈரானியக் கப்பல்களுக்கு உடனடியாக நேசக்கரம் நீட்டுக!

வளைகுடா நாடுகளில் நிலவும் தொடர்ச்சியான அதிகாரப் போராட்டங்கள் மற்றும் மோதல் நிலைகள்...

களுத்துறை நாகொடை துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் வாழைச்சேனையில் கைது!

களுத்துறை நாகொடை பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்