தமிழ் வம்சாவளி சட்ட நிபுணர் நவநீதம்பிள்ளைக்கு அமைதிக்கான நோபல் பரிசு!

Date:

சர்வதேச சட்டம், மனித உரிமைகள் மற்றும் அமைதியை மேம்படுத்தும் பணிகளுக்காக, தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த தென்னாபிரிக்க சட்ட நிபுணர் நவநீதம்பிள்ளைக்கு 2026-ம் ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

உலகின் மிக உயரிய விருதாகக் கருதப்படும் அமைதிக்கான நோபல் பரிசு, இந்த ஆண்டு நவநீதம்பிள்ளைக்கு வழங்கப்பட்டுள்ளது.

அமைதி மற்றும் சர்வதேச சட்டத்தை முன்னெடுப்பதில் அவர் ஆற்றிய பணிகளுக்காக இந்த விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு நோர்வேயின் ஓஸ்லோ நகரில் இன்று வெளியிடப்பட்டது.

“அமைதி மற்றும் சர்வதேச சட்டத்தை மேம்படுத்துவதற்கான முயற்சிகளுக்காக நவநீதம் பிள்ளைக்கு 2026-ஆம் ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசை வழங்க நோர்வே நோபல் குழு முடிவு செய்துள்ளது” என்று அந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு தெரிவித்தது.

தென்னாபிரிக்காவின் டர்பன் நகரில் இனவெறி ஆட்சிக் காலத்தில் இந்தியத் தமிழ் வம்சாவளி குடும்பத்தில் பிறந்த நவநீதம் பிள்ளை, நிறப் பாகுபாடு, இனப் பிரிவினை மற்றும் ஒதுக்கிவைப்பு ஆகியவற்றை எதிர்த்து நின்று, ஒரு வழக்கறிஞராகவும் சட்டத் துறையில் முன்னோடியாகவும் திகழ்ந்தார்.

இனவெறிக்கு எதிராகக் குரல் கொடுத்த நெல்சன் மண்டேலா உள்ளிட்டோருக்காக வாதாடிய நவநீதம் பிள்ளை, சர்வதேச நீதிமன்ற நீதிபதியாக குறிப்பிடத்தக்க பணியை ஆற்றினார்.

spot_imgspot_img

More like this
Related

பலாலியில் 17ஆவது வாரமாகத் தொடரும் காணி விடுவிப்புப் போராட்டம்

பலாலி மக்களின் பூர்வீகக் காணிகளை விடுவிக்கக் கோரி முன்னெடுக்கப்பட்டு வரும் தொடர்...

இலங்கைக் கடற்பரப்பில் தவிக்கும் ஈரானியக் கப்பல்களுக்கு உடனடியாக நேசக்கரம் நீட்டுக!

வளைகுடா நாடுகளில் நிலவும் தொடர்ச்சியான அதிகாரப் போராட்டங்கள் மற்றும் மோதல் நிலைகள்...

களுத்துறை நாகொடை துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் வாழைச்சேனையில் கைது!

களுத்துறை நாகொடை பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்