விபத்தில் பாடசாலை மாணவன் பலி

Date:

நேற்று (7) நோர்டன் பிரிட்ஜ் – ஹட்டன் பிரதான வீதியில் உள்ள பிக்போன்  பகுதியில், இ.போ.ச பேருந்துடன் மோதி மிதிவண்டியில் சென்ற பாடசாலை மாணவன் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இவ்விபத்து காலை 7:15 மணியளவில் இடம்பெற்றது. உயிரிழந்த மாணவன், நோர்டன் பிரிட்ஜ் கணபதி தமிழ் மகா வித்தியாலயத்தில் 7ஆம் வகுப்பு பயின்று வந்தவரும், பிக்போன் (டண்டுகல தோட்டம்) பகுதியைச் சேர்ந்தவருமான ஜெயராம் போல்ரிட்ஜ் ஆவார்.

ஹங்கரபிட்டியவிலிருந்து ஹட்டன் நோக்கிச் சென்று கொண்டிருந்த பேருந்துக்கு எதிர்த்திசையில் மிதிவண்டியில் சென்றுகொண்டிருந்தபோது, ​​வீதியின் சரிவான பகுதியில் எதிரே வந்த பேருந்துடன் மோதி, அவர் பேருந்தின் சக்கரத்திற்குள் சிக்கி உயிரிழந்தார்.

பேருந்து சாரதியும் நடத்துநரும் காயமடைந்த மாணவனை உடனடியாக டிக்கோயா ஆதார வைத்தியசாலைக்குக் கொண்டு சென்ற போதிலும், வழியிலேயே அவர் உயிரிழந்ததார்.

உயிரிழந்த மாணவனின் பெற்றோர் கொழும்புப் பகுதியில் பணிபுரிந்து வருவதாகவும், தனது சகோதரியின் பராமரிப்பில் வசித்து வந்த மாணவன், பாடசாலைக்குச் செல்லும் முன் வீட்டுக்குத் தேவையான சில பொருட்களை வாங்குவதற்காக நோர்டன் பிரிட்ஜ் நகருக்கு மிதிவண்டியில் சென்றுகொண்டிருந்தபோதே இவ்விபத்து நிகழ்ந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.

spot_imgspot_img

More like this
Related

பல்கலை, உயர்கல்வி நிறுவனங்களில் விடுதி வசதிகளை விரிவுபடுத்த திட்டம்

இன்று (08) நாடாளுமன்றத்தில் உரையாற்றிய பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, 2026...

பயங்கரவாதத்திலிருந்து அரசை பாதுகாக்கும் சட்டமூலத்திற்கு எதிராக மனு!

அரசாங்கத்தால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட பயங்கரவாதத்திலிருந்து அரசை பாதுகாக்கும் சட்டமூலத்தை சவாலுக்கு உட்படுத்தி...

மதுபானசாலைகளற்ற வலி வடக்கில் மதுபானசாலைக்கு அனுமதியா?” — வீதியில் இறங்கிய மக்கள்

மதுபானசாலைகளற்ற பிரதேசமாக காணப்படும் வலி வடக்கில் புதிய மதுபானசாலைக்கு அனுமதி வழங்கப்படுவதற்கு...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்