மதுபானசாலைகளற்ற வலி வடக்கில் மதுபானசாலைக்கு அனுமதியா?” — வீதியில் இறங்கிய மக்கள்

Date:

மதுபானசாலைகளற்ற பிரதேசமாக காணப்படும் வலி வடக்கில் புதிய மதுபானசாலைக்கு அனுமதி வழங்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பொது அமைப்புகளின் ஏற்பாட்டில் கண்டனப் பேரணி ஒன்று இன்று (8) முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது, எதிர்காலத்தை சிதைக்கும் செயற்பாட்டுக்கு அனுமதி கொடுத்த பிரதேச செயலரை உடனடியாக இடமாற்று என்ற வலுவான கோரிகையுடன் முன்னெடுக்கப்பட்ட குறித்த போராட்டம், தெல்லிப்பழைச் சந்தியில் காலை 9 மணியளவில் ஆரம்பமான குறித்த எதிர்ப்புப் போராட்ட பேரணி, தெல்லிப்பழை பிரதேச செயலகத்தை சென்றடைந்தது.
மதுபானசாலை அனுமதியை மறுபரிசீலனை செய்யக் கோரும் தமது நியாயக் கோரிக்கைகள் அடங்கிய மகஜர், பிரதேச செயலரிடம் கையளிக்கப்பட்டது.
போராட்டத்தில் சமூக ஆர்வலர்கள், பொது அமைப்புகளின் பிரதிநிதிகள், அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு, மதுபானசாலை அனுமதிக்கு எதிரான தமது கண்டனத்தை வெளிப்படுத்தினர்.
வலி வடக்கின் சமூகச் சூழல் மற்றும் மக்களின் நலனைக் கருத்திற்கொண்டு மதுபானசாலை அனுமதி வழங்கும் தீர்மானத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என போராட்டத்தில் பங்கேற்றவர்கள் வலியுறுத்தினர்
spot_imgspot_img

More like this
Related

இந்திய ஐரெக் பயிற்சிபெற்ற இலங்கையர்கள் அமைப்பு கொழும்பில் அங்குரார்ப்பணம் !

இந்தியா வெளிவிவகார அமைச்சின் தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்புத் திட்டத்தின் கீழ்...

உலக முட்டை தினம்: நாவிதன்வெளியில் கர்ப்பிணிப் பெண்களுக்கு முட்டைகள் வழங்கி வைப்பு

உலக முட்டை தினத்தை முன்னிட்டு நாவிதன்வெளி அரச கால்நடை வைத்தியர் அலுவலகத்தின்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்