பழைய பேருந்து பாதி வழியிலேயே நின்றது: பாடசாலை மாணவர்கள் நிர்க்கதி!

Date:

சேந்தாங்குளத்தில் இருந்து பாடசாலை மாணவர்களை ஏற்றிச்சென்ற இ.போ.ச பேருந்து பழுதடைந்ததால், யாழ் நகரிலுள்ள பாடசாலைகளுக்கு சென்ற பல மாணவர்கள் பாதி வழியிலேயே வீடு திரும்ப வேண்டிய அவல நிலை ஏற்பட்டுள்ளது.

சேந்தாங்குளத்திலிருந்து இன்று (8) காலை பாடசாலை மாணவர்களை ஏற்றிச்சென்ற இலங்கை போக்குவரத்துசபைக்கு சொந்தமான பேருந்து, இளவாலை சந்திக்கு அண்மையாக பழுதடைந்துள்ளது.

இதனால், யாழ் நகரிலுள்ள பாடசாலைகளில் கல்வி பயிலும் மாணவர்கள் பாடசாலை செல்ல முடியாத நிலையேற்பட்டுள்ளது. மாற்று ஏற்பாடுகள் இல்லாததால் மாணவர்கள் வீடு திரும்ப வேண்டியேற்பட்டுள்ளதாக பெற்றோர் விசனம் தெரிவித்தனர்.

பாடசாலை சேவையில் ஈடுபடும் இந்த பேருந்து மிக பழுதடைந்த, பழைய பேருந்து என்றும் பெற்றோர் தெரிவித்தனர்.

spot_imgspot_img

More like this
Related

அனோஜனின் உயிரைக் காக்கப் பொதுமன்னிப்பு வழங்குங்கள்- சிவசரி பத்மநிலோஜன் குருக்கள் உருக்கமான வேண்டுகோள்

சமூக வலைத்தளப் பதிவொன்று தொடர்பாகச் சவுதி அரேபியாவில் கைது செய்யப்பட்டு மரண...

விபத்தில் பின்னாலிருந்த காதலி மரணம்: காதலன் எடுத்த விபரீத முடிவு!

பாடசாலைப் பருவத்திலிருந்தே காதலித்து வந்த இளம் பெண் ஒருவர், தனது காதலனுடன்...

ஷிராந்தி இன்று தேசிய கண் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படுவார்

தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஷிராந்தி ராஜபக்ஷவை, கொழும்பு தேசிய கண் மருத்துவமனையில்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்