மட்டு சந்திவெளியில் கட்டிட சுவர் இடிந்து விழுந்து இரண்டு பிள்ளைகளின் தந்தை பலி

Date:

மட்டக்களப்பு, சந்திவெளி பிரதேசத்தில் வீடு ஒன்றினன் கட்டுமானப் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது கட்டிட சுவர் ஒன்று இடிந்து விழுந்ததில் இரண்டு பிள்ளைகளின் தந்தை ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மற்றுமொருவர் படுகாயமடைந்துள்ள சம்பவம் இன்று செவ்வாய்க்கிழமை (6) காலை 8.00 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக சந்திவெளி பொலிசார் தெரிவித்தனர்.

கிண்ணியடி வீதியைந் சேர்ந்த 48 வயதுடைய சாமித்தம்பி குமாரசிங்கம் எனும் மேசன் தொழிலாளியே இவ்வாறு பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்

சந்திவெளி பிரதான வீதியை அண்மித்த பகுதியில் புதிதாக நிர்மாணிக்கப்படும் வீடு ஒன்றுக்கு சம்பவ தினமான இன்று காலை இரு மேசன் தொழிலாளர்கள் கொங்கிறீட் கொட்டுவதற்காக சட்டிங் (பலகை) அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த போது எதிர்பாராத விதமாக சுவர் இடிந்து வீழ்ந்ததையடுத்து ஒருவர் சம்பவ இடத்திலே உயிரிழந்ததுடன் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்

இதனையடுத்து படுகாயமடைந்த இரு வரையும் அருகிலுள்ள சந்திவெளி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் கிண்ணையடியைச் சேர்ந்த சாமித்தம்பி குமாரசிங்கம் ஏற்கனவே உயிரிழந்ததாக வைத்தியர்கள் தெரிவித்ததுடன் படுகாயமடைந்த மற்றுமொருவர் மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு இட மாற்றப்பட்டுள்ளார்.

உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை சந்திவெளி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

-கனகராஜா சரவணன்-

spot_imgspot_img

More like this
Related

ஈரான் நடவடிக்கையில் அமெரிக்கா இழந்த விமானங்களின் விபரம் வெளியானது!

பெப்ரவரி மாத இறுதியில் இருந்து ஈரானுக்கு எதிரான நடவடிக்கைகளின் போது குறைந்தது...

பசிலின் மற்றொரு காணிக்கும் ஆப்பு!

முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவுக்குச் சொந்தமானது எனக் கூறப்படும், மாத்தறை பிரவுன்ஸ்...

ஞானசாரரின் கைதி உடை: நீதிமன்றம் வெளியிட்ட கருத்து!

தற்போது சிறைத்தண்டனை அனுபவித்து வரும் 'பொது பல சேனா'  அமைப்பின் பொதுச்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்