சம்மாந்துறையில் ‘ஐ*ஸ்’ போதைப்பொருளுடன் 21 வயது இளைஞன் கைது!

Date:

4 கிராமுக்கும் அதிகமான ‘ஐஸ்’ போதைப்பொருளுடன் 21 வயதுடைய இளைஞன்
சம்மாந்துறை  பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

அம்பாறை மாவட்டம், சம்மாந்துறைப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் சம்மாந்துறைப் போக்குவரத்துப் பிரிவுப் பொறுப்பதிகாரி  தலைமையிலான பொலிஸ் குழு ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த வேளை திங்கட்கிழமை(5)   இக்கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.

வீதி  ரோந்துப் பணியின் போது சந்தேகத்திற்கிடமான முறையில் நடமாடிய குறித்த இளைஞரைச் சோதனையிட்டபோது   குறித்த சந்தேக நபரான இளைஞனின்  உடமையிலிருந்து 4 கிராமுக்கும் அதிகமான ‘ஐஸ்’ போதைப்பொருள் கைப்பற்றப்பட்டதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

அத்துடன் இவ்வாறு கைதானவர் சம்மாந்துறைப் பகுதியைச் சேர்ந்த 21 வயதுடைய   இளைஞன் என்பதுடன்  கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களுடன் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காகச் சம்மாந்துறைப் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளைச் சம்மாந்துறைப் பொலிஸார் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்

spot_imgspot_img

More like this
Related

ஷிராந்தி இன்று தேசிய கண் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படுவார்

தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஷிராந்தி ராஜபக்ஷவை, கொழும்பு தேசிய கண் மருத்துவமனையில்...

பல்கலை, உயர்கல்வி நிறுவனங்களில் விடுதி வசதிகளை விரிவுபடுத்த திட்டம்

இன்று (08) நாடாளுமன்றத்தில் உரையாற்றிய பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, 2026...

பயங்கரவாதத்திலிருந்து அரசை பாதுகாக்கும் சட்டமூலத்திற்கு எதிராக மனு!

அரசாங்கத்தால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட பயங்கரவாதத்திலிருந்து அரசை பாதுகாக்கும் சட்டமூலத்தை சவாலுக்கு உட்படுத்தி...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்