காட்டு யானை தாக்குதல்: 15 வயது மாணவன் காயம்

Date:

அம்பாறை – மத்திய முகாம் 03 ஆம் பிரிவைச் சேர்ந்த 15 வயதுடைய பாடசாலை மாணவன்  காட்டு யானையின் தாக்குதலுக்குள்ளாகிப்   காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இச் சோகச் சம்பவம்   வெள்ளிக்கிழமை(02)  அதிகாலை   கிட்டங்கி பாலத்திற்கு அருகில் இடம்பெற்றுள்ளது.

நற்பிட்டிமுனை – சேனைக்குடியிருப்புப் பகுதியில் இருந்து மத்திய முகாம் பிரதேசத்தை நோக்கிச் குறித்த மாணவன் துவிச்சக்கர வண்டியில் பயணித்துக் கொண்டிருந்தவேளையிலேயே, வீதிக்குக் குறுக்கே வந்த காட்டு யானை திடீரெனத் தாக்கியுள்ளது.

யானையின் தாக்குதலில் காயமடைந்த மாணவன் உடனடியாக மீட்கப்பட்டு, கல்முனை  ஆதார வைத்தியசாலையில் அவசர சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இச் சம்பவம் தொடர்பில் கல்முனைப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கிட்டங்கி மற்றும் அதனைச் சுற்றியுள்ள விவசாய கிராமப்புற வீதிகளில் அதிகாலை மற்றும் இரவு வேளைகளில் காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகரித்து வருவதனால், அப்பாதையைப் பயன்படுத்தும் பாடசாலை மாணவர்கள் மற்றும் விவசாயிகள் பெரும் அச்சத்துடன் பயணிக்க வேண்டிய சூழல் நிலவுவதாகப் பொதுமக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

spot_imgspot_img

More like this
Related

7 நிபந்தனைகள் நிறைவேறும் வரை ஹோர்முஸ் திறக்கப்படாது

அமெரிக்காவுடன் ஜூன் மாதம் மேற்கொள்ளப்பட்ட இடைக்கால ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ள ஈரானின் ஏழு...

மீனவர்களின் வாழ்வியலை சிதைக்கிறார் அமைச்சர்” – நீதிமன்றம் செல்லத் தயாராகும் கடற்றொழில் இணையம்

மீனவர்களின் வாழ்வியலை சிதைக்கும் கடல் தொழில் அமைச்சருக்கு எதிராக நீதிமன்ற வழக்கினை...

கொழும்பில் திருட்டில் ஈடுபட்ட குற்றத்தில் தமிழகத்தை சேர்ந்த இருவர் யாழில் கைது

கொழும்பில் திருட்டில் ஈடுபட்ட தமிழகத்தை சேர்ந்த இருவர் யாழ்ப்பாணத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர் கொழும்பு...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்