எதிர்க்கட்சித் தரப்பில் உள்ளவர்கள் பிணையில் இருப்பவர்கள் அல்லது சந்தேகத்திற்குரியவர்கள் என்று அரசாங்கம் குற்றம் சாட்டும் நிலையில், அரசாங்கத்தின் பேரணி ஒன்றில் ஜனாதிபதிக்கு பின்னால் நின்றிருந்த அமைச்சர் வசந்த சமரசிங்கவும் பிணையில் இருப்பவரா அல்லது சந்தேகத்திற்குரியவரா என்ற கேள்வி எழுவதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்தார்.
ஊடகங்களிடம் பேசிய அவர், தங்களுக்கு சவால் விடுக்கக்கூடியவர்களைப் பல்வேறு சம்பவங்களில் சிக்கவைத்து சிறையிலடைக்க தற்போதைய அரசாங்கம் முயற்சிப்பதாகக் குறிப்பிட்டார்.
மேலும், தற்போதைய அரசாங்கத்தின் ‘கிரிப்டோகரன்சி (cryptocurrency) சொத்துக்கள்’ மற்றும் ‘மூன்று மாடி வீடுகள்’ குறித்து, அடுத்து ஆட்சிக்கு வரும் அரசாங்கமே விசாரணை நடத்த வேண்டியிருக்கும் என்றும் வீரவன்ச கூறினார்.




