நீதியின் ஓலம் போராட்டத்திற்கு அனுமதியளித்த வலி கிழக்கு தவிசாளரிடம் பொலிஸ் தரப்பு விளக்கம் கோரியது

Date:

யாழ். செம்மணிப்பகுதியில் இடம்பெறும் நீதியின் ஓலம் 2 போராட்டம்  இனங்களுக்கிடையே அமைதியற்ற, பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிப்பதற்கு வழிவகுக்கும் விடயமாக உள்ளதாகக் குறிப்பிட்டு அவ்வாறான ஒரு போராட்டத்திற்கு வலிகாமம் கிழக்குப் பிரதேச சபைத் தவிசாளர் தியாகராஜா  நிரோஷ்   அனுமதியளித்துள்ள விடயம் தொடர்பில் பொலிஸ் திணைக்களம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, இன்று சனிக்கிழமை (15) வலிகாமம் கிழக்கு பிரதேச சபைத் தவிசாளர் தியாகராஜா  நிரோஷ்   எவ்வகையில் போராட்டத்திற்கு அனுமதியளிக்க முடியும் விளக்கம் கேட்டு யாழ்ப்பாண பொலிஸ் தலைமையகத்தில் அவரது அலுவலகத்தில் கடிதம் கையளிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பிலதவிசாளரிடம் கேட்டபோது, யாழ்ப்பாண தலைமைப் பிரதான பொலிஸ் பொறுப்பதிகாரியின் கடிதத்துடன் எனது அலுவலகத்திற்கு வருகை தந்த பொலிசார் என்னை பதிலளிக்குமாறு கோரும்  கடிதத்தினை கையளித்தனர்.
அக் கடிதத்தில், செம்மணியில் போராட்டக்காரர்கள் தங்கியிருந்து போராடுவதுடன் பேரணியாக யாழிலுள்ள ஐக்கியநாடுகள் சபையின் அலுவலகத்தில் மனு கையளிக்கப்படுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அப் போராட்டத்திற்கு வலிகாமம் கிழக்கு பிரதேச சபைத் தவிசாளர் தியாகராஜா  நிரோஷ்  ஆகிய நீங்கள் அனுமதி வழங்கியுள்ளமை  பொலிஸ் தரப்பிற்குத் தெரிய வந்துள்ளதாகவும்  இவ்வாறான போராட்டத் தொடர் நடத்தப்படுவதன் மூலம், இலங்கையினுடைய வெவ்வேறு இனத்தவர்களுக்கிடையே ஒருவித அமைதியற்ற சூழ்நிலை ஏற்படுவதற்கும்இ பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிப்பதற்கும் வழிவகுக்கும் என பொலிஸ் கருதுவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் பொலிஸ் பொறுப்பதிகாரியின் கடிதத்தில், பொலிஸ் தரப்பின் அனுமதியின்றி இவ்வாறான போராட்டத் தொடரை நடத்துவதற்கு உங்களால் அனுமதி வழங்கப்பட்டுள்ளதா எனக் கேள்வி எழுப்பியுள்ளதுடன் அவ்வாறு அனுமதி வழங்கப்பட்டிருப்பின்இ அதற்கான சட்டபூர்வமான அடிப்படை என்ன? இவ்வாறானதொரு போராட்டத் தொடரை எம்மால் எவ்வகையிலும் அங்கீகரிக்க முடியாது எனவும் பொலிசார் குறிப்பிட்டுள்ளனர்.
இந் நிலையில் ஜனநாயக ரீதியிலான நீதி கோரிய வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் நீதிகோரிய போராட்டத்தினை எமது பயன்பாட்டில் உள்ள நிலத்தில் நடத்துவதற்கு கோரிக்கை விடுக்கப்பட்ட நிலையில் ஜனநாயக ரீதியிலான மனித உரிமைகளை வலியுறுத்திய மக்கள் போராட்டம் என்ற அடிப்படையில் எமது மக்களின் உரிமைகளைக் கருத்தில் கொண்டு தான் அனுமதியளித்ததாக வலிகாமம் கிழக்கு பிரதேச சபைத் தவிசாளர் தியாகராஜா நிரோஷ்   பொலிஸ் தரப்பிற்கு எழுத்து மூலம் பதிலளித்தள்ளமை குறிப்பிடத்தக்கது.
spot_imgspot_img

More like this
Related

நீதிக்கான ஓலம் – சர்வதேச விசாரணையை வலியுறுத்தி ஒன்றிணையும் தமிழர் தரப்பு

கடந்த காலங்களில் இடம்பெற்ற படுகொலைகள், காணாமல் ஆக்கப்பட்ட சம்பவங்கள் மற்றும் ஏனைய...

அபிவிருத்தி உத்தியோகத்தர்களை அவமதித்ததாக குற்றச்சாட்டு – போராட்டத்திற்கு அழைப்பு

அபிவிருத்தி உத்தியோகத்தர் சேவையை களங்கப்படுத்தும் அதிகார துஷ்பிரயோகத்தில் ஈடுபடும் அரச அதிகாரிகளுக்கு...

சாய்ந்தமருதில் இளைஞர், யுவதிகளுக்கு தொழிற்பயிற்சி கற்கை நெறிக்கு புலமைப் பரிசில் வழங்கி வைப்பு

சமுர்த்தி அபிவிருத்தி  திணைக்களத்தின் தேசிய வலுவூட்டல் மாதத்தை முன்னிட்டு சந்தைப்படுத்தல் வேலைத்திட்டத்தின்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்