முஸ்லிம் பெண்களின் ஆடை விவகாரத்தில் அரசாங்கம் உறுதியான தீர்மானத்துக்கு வரவேண்டும்! – இம்ரான் எம்.பி

Date:

முஸ்லிம் பெண்களின் ஆடை விவகாரத்தில் அரசாங்கம் உறுதியான தீர்மானம் ஒன்றுக்கு வரவேண்டும் என திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் தெரிவித்தார்.
கல்முனை வடக்கு வைத்தியசாலையில் முஸ்லிம் பெண் ஊழியர்களின் ஆடை தடை குறித்து இன்று (11) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இதுதொடர்பாக மேலும் தெரிவிக்கையில்,
முஸ்லிம் பெண்களின் ஆடை விவகாரம் சில அரச உத்தியோகத்தர்களால் தேவையற்ற தலையீடுகளுக்கு உள்ளாகின்றது. இதுபோன்ற சம்பவங்கள் அடிக்கடி நிகழ்கின்றன. ஒவ்வொரு சமூகத்தவரதும் சமய கலாசார உரிமைகள் அரசியலமைப்பின் ஊடாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
அரசியலமைப்பை பேணி நடக்க வேண்டியது ஒவ்வொரு அரச உத்தியோகத்தரதும் பொறுப்பாகும். இதனை மீறும் அரச உத்தியோகத்தருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் நடைமுறைகளை அரசாங்கம் அமுல்படுத்த வேண்டும்.
சில அரச உத்தியோகத்தர்களின் இதுபோன்ற செயற்பாடுகள் சமூகங்களிடையே மீண்டும் முரண்பாடுகளையும் பிளவுகளையும் ஏற்படுத்தும். இது அரசாங்கத்தின் வளமான நாடு கொள்கையை கேள்விக் குறிக்கும்.
எனவே, முஸ்லிம் பெண்களின் ஆடை விவகாரம் அடிக்கடி தேவையற்ற தலையீடு செய்யப்படுவதால் அரசாங்கம் உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
spot_imgspot_img

More like this
Related

நிதி நிறுவனத்தில் அதிர்ச்சிச்சம்பவம்: பெண்கள் கழிப்பறையில் இரகசிய கமரா!

ஒரு நிதி நிறுவனத்தில் பணிபுரியும் பெண்களின் நிர்வாணப் புகைப்படங்களை எடுத்த நபர்,...

லெபனானில் இஸ்ரேல் படைகள் தங்கியிருப்பதை ஏற்றுக்கொள்ளாத அமெரிக்கா!

லெபனானுக்குள் இஸ்ரேலிய இராணுவம் நிரந்தரமாகத் தங்கியிருப்பதை டிரம்ப் நிர்வாகம் ஆதரிக்கவில்லை என்று...

இன்று சில பகுதிகளில் கடும் வெப்பம்

வவுனியா, முல்லைத்தீவு, திருகோணமலை, பொலன்னறுவை, மட்டக்களப்பு, அம்பாறை மற்றும் மொனராகலை மாவட்டங்களின்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்