ஆலையடிவேம்பு பிரதேச சபையில் பணியாற்றும் தொழில்நுட்ப உத்தியோகத்தர் 40 ஆயிரம் ரூபாய் பணத்தை இலஞ்சமாகப் பெற்ற குற்றச்சாட்டின் பேரில் கொழும்பில் இருந்து சென்ற இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக் குழுவினரால் திங்கட்கிழமை (10) அக்கரைப்பற்றில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
குறித்த பிரதேச சபையினால் அமைக்கப்பட்டுவரும் வடிகான் ஒன்றின் ஒப்பந்தகாரர் ஒருவரிடம் இலஞ்சமாக 40 ஆயிரம் ரூபாவை தொழில்நுட்ப உத்தியோகத்தர் கேட்டுள்ளார்.
பாதிக்கப்பட்ட ஒப்பந்தகாரர் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவிடம் முறைப்பாடு செய்ததையடுத்து அவர்களின் வழிகாட்டலில் சம்பவ தினமான நேற்று பகல் அம்பாறை வீதியில் இலஞ்சஉழல் ஆணைக் கழுவினர் மாறு வேடத்தில் கண்காணிப்பில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்
இதன் போது அங்கு குறித்த ஒப்பந்தகாரரிடம் இருந்து 40 ஆயிரம் ரூபாவை பிரதேச சபையில் கடமையாற்றிவரும் தொழில்நுட்ப உத்தியோகத்தர் இலஞ்சமாக பெற்றுக் கொண்டபோது மாறுவேடத்தில் இருந்த இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினர் சுற்றிவளைத்து கையும் மெய்யுமாக பிடித்து கைது செய்தனர்
இதில் கைது செய்யப்பட்டவரை அக்கரைப்பற்று நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கையை இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினர் மேற்கொண்டு வருகின்றதாக அவர் தெரிவித்தார்
இதேவேளை கடந்த காலத்தில் ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தில் கடமையாற்றிவந்து உயிரிழந்த பிரதேச செயலாளர் மற்றும் கணக்காளர் பிரதி பிரதேச செயலாளர் உட்பட்டோர் இவ்வாறு கட்டிட ஒப்பந்த காரரிடம் 2 இலச்சும் இலஞ்சமாக பெற்று கைது செய்யப்பட்டதுடன் கடந்த வருடம் பதிவாளர் ஒருவார் இலஞ்சம் பெற்று கைது செய்யப்பட்டதுடன் இதுவரை இலஞ்சம் வாங்கிய 5 அதிகாரிகள் கைது செய்யட்டுள்ளமை குறிப்பிடதக்கது.




