வெல்லாவெளியில் கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகையிட்ட பொலிசார் மீது தாக்குதல் இரு பொலிசர் படுகாயம் – மோட்டார்; சைக்கிள் காணாமல் போள்ளதையடுத்து பதற்றம்

Date:

மட்டு வெல்லாவெளி 35 ம் கொலனியில்   சட்டவிரோத கசிப்பு உற்பத்தி நிலையத்தை முற்றுகையிட்ட பொலிசார் மீது பெண்கள் உட்பட 25 பேர் கொண்ட குழுவினர் தாக்குதலில் இரு பொலிசார் படுகாயமடைந்த நிலையில் மட்டு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் நேற்று வியாழக்கிழமை (6) இரவு இடம் பெற்றுள்ளதாகவும்  பொலிசாரின் மோட்டர் சைக்கிள் ஒன்றை காணாமல் போயுள்ளதையடுத்து பெரும் பதற்றம்.

இது பற்றி தெரியவருவதாவது

குறித்த பகுதியில் கசிப்பு உற்பத்தி நிலையம் செயற்பட்டு வருவதாக பொலிசாருக்கு கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து வெல்லாவெளி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமையில் ஜீப்வண்டி மற்றும் மோட்டார் சைக்கிளில் 7 பர் கொண்ட பொலிஸ் குழுவினர் சம்பவ தினமான நேற்று இரவு 7 மணியளவில் 35 ம் கொலனியில் உள்ள கசிப்பு உற்பத்தி நிலையத்தை முற்றுகையிட்டனர். .

இதனையடுத்து அங்கு முற்றுகையிட்ட பொலிசார் மீதுகசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டவர்களின் உறவினர்களான பெண்கள் உட்பட 25 பேர் கொண்ட குழுவினர் பொலிசார் மீது பொல்லுகளால்  தாக்குதல் நடாத்தி அவர்களை கசிப்பு உற்பத்தி நிலையத்தை முற்றுகையிட விடாமல் தடுத்தனர்.

இதன் போது இரு பொலிசார் படுகாயமடைந்ததையடுத்து அவர்களை மட்டு போதனா வைத்தியசாலையில் அனுமதித்தனர் இதனையடுத்து அங்கு பெரும் பதற்றம் ஏற்பட்டதுடன் தாக்குதலை நடாத்தியவர்கள் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளதாகவும் பொலிசார் சென்ற மோட்டார் சைக்கிள் ஒன்று காணாமல் போயுள்ளததையடுத்து அங்கு மேலதிக பொலிசார் வரவழைக் கப்பட்டு தாக்குதலை நடாத்தி விட்டு தப்பி ஓடி தலைமறைவாகியவர்களை தேடிவருவதாக பொலிசார் தெரிவித்தனர்

இது தொடர்பாக மேலதிக விசாரனைகளை வெல்லாவெளி பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

spot_imgspot_img

More like this
Related

சம்மாந்துறையில் கட்டாக்காலி மாடுகள் பிடிப்பு : போக்குவரத்துக்கு இடையூறு விளைவித்த மாடுகளுக்கு எதிராக பிரதேச சபை – பொலிஸார் இணைந்து நடவடிக்கை

பொதுப் போக்குவரத்துக்கு இடையூறு விளைவித்து, தொடர்ச்சியாக வீதி விபத்துகளுக்கும் விவசாயப் பயிர்...

யாழ்ப்பாண நகரில் இலங்கைப் படையினர் சோள வியாபாரம் – சொந்த நிலத்திற்கு செல்ல முடியாமல் வலி வடக்கு மக்கள் அவதி!

​யாழ்ப்பாண நகரில்  சோள வியாபார நடவடிக்கைகளில் இலங்கைப் படையினர் ஈடுபட்டு வருவதால்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்