சம்மாந்துறையில் கட்டாக்காலி மாடுகள் பிடிப்பு : போக்குவரத்துக்கு இடையூறு விளைவித்த மாடுகளுக்கு எதிராக பிரதேச சபை – பொலிஸார் இணைந்து நடவடிக்கை

Date:

பொதுப் போக்குவரத்துக்கு இடையூறு விளைவித்து, தொடர்ச்சியாக வீதி விபத்துகளுக்கும் விவசாயப் பயிர் சேதங்களுக்கும் காரணமாக இருந்து வந்த கட்டாக்காலி மாடுகளை சம்மாந்துறை பிரதேச சபை, சம்மாந்துறை பொலிஸாரின் ஒத்துழைப்புடன் விசேட நடவடிக்கையின் மூலம் பிடித்துள்ளது.

சம்மாந்துறை பிரதேச சபை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கட்டாக்காலியாக விடப்பட்டு வீதிகளில் சுற்றித்திரிந்த மாடுகள் காரணமாக அன்றாடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டதுடன், வீதி விபத்துகள் அதிகரித்து வந்ததாகவும், விவசாயிகளின் பெறுமதிமிக்க பயிர்கள் சேதமடைந்து வருவதாகவும் பொதுமக்களிடமிருந்து பல்வேறு முறைப்பாடுகள் தொடர்ந்து கிடைத்ததை அடுத்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக பிரதேச சபை தெரிவித்துள்ளது.

இதனையடுத்து, பிரதேச சபைகள் சட்டத்தின் கீழ் சம்மாந்துறை நகரப் பகுதியில் போக்குவரத்துக்கு இடையூறாக வீதிகளில் சுற்றித்திரிந்த கட்டாக்காலி மாடுகள் அடையாளம் காணப்பட்டு பிடிக்கப்பட்டன.

இது தொடர்பில் மாட்டு உரிமையாளர்களுக்கு பல தடவைகள் எச்சரிக்கை மற்றும் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்ட போதிலும் அவை கவனத்தில் கொள்ளப்படாத காரணத்தினால் சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டதாகவும் பிரதேச சபை குறிப்பிட்டுள்ளது.

பிடிக்கப்பட்ட மாடுகளின் உரிமையாளர்கள் நிர்ணயிக்கப்பட்ட தண்டப்பணத்தை செலுத்தி தங்களது மாடுகளை மீளப் பெற்றுக்கொள்ளலாம் என்றும், ஒரு நாளுக்கு மேல் மாடுகளை பெற்றுக்கொள்ளாத பட்சத்தில் ஒவ்வொரு நாளுக்கும் பராமரிப்புச் செலவு மேலதிகமாக அறவிடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், பிடிக்கப்பட்ட மாடுகளை மூன்று நாட்களுக்குள் உரிமையாளர்கள் பெற்றுக்கொள்ளத் தவறினால், அவற்றை சம்மாந்துறை பொலிஸார் ஊடாக நீதிமன்றத்தில் ஒப்படைத்து மேலதிக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என சம்மாந்துறை பிரதேச சபை தெரிவித்துள்ளது.

பொதுமக்களின் பாதுகாப்பையும், சீரான போக்குவரத்தையும் உறுதிப்படுத்தும் நோக்கில் இவ்வாறான நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் எனவும், மாட்டு உரிமையாளர்கள் தங்களது கால்நடைகளை பொறுப்புடன் பராமரித்து வீதிகளில் கட்டாக்காலியாக விடுவதைத் தவிர்க்குமாறும் பிரதேச சபை கேட்டுக்கொண்டுள்ளது.

spot_imgspot_img

More like this
Related

மட்டக்களப்பு சிறைச்சாலையை சுற்றி இராணுவ பாதுகாப்பு மோட்டார்சைக்கிள் இராணுவ ரோந்து நடவடிக்கையடுத்து – பரபரப்பு

மட்டக்களப்பு சிறைச்சாலையை சுற்றி இராணுவத்தினர் மற்றும் விசேட அதிரடிப்படையினர் பொலிசார் இணைந்து...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்