ஜனாதிபதி விருதைப் பெற்ற சாய்ந்தமருது மாணவன் அன்சார் முஹம்மட் சினான்

Date:

இலங்கை சாரணர் சங்கத்தின் உயரிய கௌரவ விருதான ஜனாதிபதி சாரணர் விருதை சாய்ந்தமருதைச் சேர்ந்த கல்முனை ஸாஹிரா கல்லூரி (தேசிய பாடசாலை) மாணவர் அன்சார் முஹம்மட் சினான் பெற்றுக்கொண்டுள்ளார்.

சாரணர் இயக்கத்தில் சிறப்பான ஈடுபாடு, தலைமைத்துவத் திறன், சமூக சேவை மற்றும் பல்வேறு செயற்பாடுகளில் தொடர்ச்சியான பங்களிப்பு ஆகியவற்றை அங்கீகரிக்கும் வகையில் இவ்விருது அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.

அன்சார் முஹம்மட் சினான், USF ஸ்ரீலங்கா அமைப்பின் செயற்பாட்டாளராகவும், YMMA சாய்ந்தமருது கிளையின் இளைஞர் விருது மற்றும் பயிற்சிப் பிரிவுத் தலைவராகவும் சமூக மற்றும் இளைஞர் மேம்பாட்டு பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.

சாய்ந்தமருதிற்கு பெருமை சேர்த்துள்ள இளம் சாரணரின் இச்சாதனைக்கு கல்வியாளர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்களும் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்துவருகின்றனர்.

spot_imgspot_img

More like this
Related

ஓமானிலிருந்து ‘தூக்கி வரப்பட்ட’ பிரபல குண்டர் தலைவன்!

மட்டக்குளியில் பல கொலைகள் மற்றும் கொலை முயற்சிகளில் ஈடுபட்ட, குறிப்பாக சஞ்சீவ...

பசிலின் பணத்தை பறிமுதல் செய்ய நீதிமன்றம் உத்தரவு!

மாத்தறையில் 1.5 ஏக்கர் நிலத்தை முறைகேடாகப் பெறப்பட்ட நிதியைப் பயன்படுத்தி வாங்கியதாகக்...

கிளிநொச்சியில் புலிகளின் முகாமா?: அரசு விளக்கம்!

பளை (Palai) வனப்பகுதிக்குள் புலிகள் இயக்கத்தின் முகாம் ஒன்று இருப்பதாகச் சமூக...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்