நீர்கொழும்பு சிறைக்கலவரத்தில் காயமடைந்த மேலும் 2 சிறை உத்தியோகத்தர்கள் பலி

Date:

நீர்கொழும்பு சிறைச்சாலையில் நடந்த மோதலில் படுகாயமடைந்து கொழும்பு தேசிய மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மேலும் இரண்டு சிறைச்சாலை உத்தியோகத்தர்கள் நேற்று முன்தினம் (13) இரவு உயிரிழந்தனர்.

அதன்படி, நீர்கொழும்பு சிறைச்சாலையில் உயிரிழந்த சிறைச்சாலை உத்தியோகத்தர்களின் எண்ணிக்கை பத்தாக அதிகரித்து, மொத்த உயிரிழப்புகளின் எண்ணிக்கை 31 ஆக உயர்ந்துள்ளது.

உயிரிழந்தவர்கள் அம்பலந்தொட்டையைச் சேர்ந்த 35 வயதான சந்திகா லக்ஷன் மற்றும் லூனுகம்வெஹெராவைச் சேர்ந்த 26 வயதான மதுசங்க ரணவீர (மதுசர ரணவீர என்றும் அழைக்கப்படுபவர்) என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

சந்திகா லக்ஷனின் ஏழு வயது குழந்தைக்கு இதய நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், அதற்கு உடனடியாக அறுவை சிகிச்சை செய்யப்பட வேண்டும் என்றும் சிறை அதிகாரிகள் கூறுகின்றனர்.

ஜூலை 5 மற்றும் 6 ஆம் திகதிகளில் நீர்கொழும்பு சிறைச்சாலையில் நடந்த மோதலில் 21 சிறைக்கைதிகள் உயிரிழந்தனர்.

மோதலில் காயமடைந்த மற்ற சிறைக்கைதிகள் மற்றும் சிறைச்சாலை உத்தியோகத்தர்கள் கொழும்பு தேசிய மருத்துவமனை மற்றும் நீர்கொழும்பு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

spot_imgspot_img

More like this
Related

கல்முனை கார்மேல் பற்றிமா கல்லூரியின் புதிய அதிபராக அருட்தந்தை லெபோன் சுதன் கடமையேற்பு

கல்முனை கார்மேல் பற்றிமா கல்லூரி தேசிய பாடசாலையின் புதிய அதிபராக இலங்கை...

பஸ் லலித் விசாரணையில் கக்கியவை!

டுபாயிலிருந்து அழைத்து வரப்பட்ட பாதாள உலகக் குற்றவாளி லலித் கண்ணங்காரவிடம் நடத்தப்பட்ட...

அம்பிட்டிய சுமண ரத்ன தேரருக்கு விளக்கமறியல்

கைதான மங்களாராம விகாரையின் விகாராதிபதி அம்பிட்டிய சுமண ரத்ன தேரரை நாளை...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்