5 கிராம் ஐஸ் வைத்திருந்தவருக்கு ஆயுள்!

Date:

5 கிராமுக்கும் அதிகமான ‘ஐஸ்’ போதைப் பொருளைத் தன்வசம் வைத்திருந்து, விற்பனை செய்த குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டிருந்த நபர் ஒருவருக்கு மன்னார் மேல் நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

கடந்த 2023 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 14 ஆம் திகதி, 5 கிராமுக்கும் அதிகமான ‘ஐஸ்’ போதைப்பொருளைத் தன்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டின் கீழும், அதனை விற்பனை செய்த குற்றச்சாட்டின் கீழும் கைது செய்யப்பட்ட நபர் ஒருவருக்கே மன்னார் மேல் நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

குறித்த வழக்கின் விசாரணைகள் மன்னார் நீதிமன்றில் இடம்பெற்று வந்த நிலையில், அரசு தரப்பால் முன்வைக்கப்பட்ட ஆதாரங்கள் அனைத்தும், குற்றவாளியின் மீதான குற்றச்சாட்டுகளைச் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிப்பதாக அமைந்திருந்தன.

இவ்வழக்கின் அனைத்துப் பரிமாணங்களையும், சமர்ப்பிக்கப்பட்ட சான்றுகளையும் ஆராய்ந்த மன்னார் மேல் நீதிமன்ற நீதிபதி ஏ.ஏ. ஆனந்தராஜா, குற்றச்சாட்டுகள் அனைத்தும் நியாயமான சந்தேகங்களுக்கு அப்பால் நிரூபிக்கப்பட்டுள்ளதை உறுதிசெய்தார்.,
கடந்த 01.07.2026 அன்று குறித்த குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பை அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

spot_imgspot_img

More like this
Related

பசிலின் பணத்தை பறிமுதல் செய்ய நீதிமன்றம் உத்தரவு!

மாத்தறையில் 1.5 ஏக்கர் நிலத்தை முறைகேடாகப் பெறப்பட்ட நிதியைப் பயன்படுத்தி வாங்கியதாகக்...

கிளிநொச்சியில் புலிகளின் முகாமா?: அரசு விளக்கம்!

பளை (Palai) வனப்பகுதிக்குள் புலிகள் இயக்கத்தின் முகாம் ஒன்று இருப்பதாகச் சமூக...

சிறுநீர்ப்பையிலிருந்த 3.1 Kg கல் அகற்றல்: திருமலை வைத்தியசாலையில் சம்பவம்!

திருகோணமலையில் உள்ள ஒரு மருத்துவமனையில், 55 வயது நோயாளி ஒருவரிடமிருந்து 3.1...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்