கொக்கட்டிச்சோலையில் இருந்து வாவி ஊடாக ஆரையம்பதிக்கு தோணியில் 150 லீற்றர் கசிப்பு கடத்திய ஒருவர் கைது

Date:

கொக்கட்டிச்சோலையில் இருந்து ஆரையம்பதி பிரதேசத்துக்கு காஞ்சிரம்குடா வாவி ஊடாக மீன்பிடி தோணியில் கசிப்பு கடத்தி சென்று ஒருவரை 150 லீற்றர் கசிப்புடன் இன்று வெள்ளிக்கிழமை (10) அதிகாலையில் கஞ்சரம்குடாவில்  வைத்து 60 வயதுடைய ஒருவரை கைது செய்துள்ளதாக கொக்கட்டிச்சோலை பொலிசார் தெரிவித்தனர்

விசேட புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த இரகசிய தகவல் ஒன்றினையடுத்து கொக்கட்டிச்சோலை பொலிஸ் நிலைய பெரும் குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் வேனுஜன் தலைமையில் பொலிஸ் கொஸ்தாப்பரகளான யசோதரன், ஹேமச்சந்திர மற்றும்  விசேட புலனாய்வு பிரிவினர் இணைந்து சம்பவ தினமான இன்று அதிகாலை 4 மணிக்கு  குறித்த வாவியை முற்றுகையிட்டு சோதனையில் ஈடுபட்டனர்

இதன்போது தோணியில் கலன்களில் எடுத்துச் செல்ல முற்பட்ட 150 லீற்றர் கசிப்புடன் 60 வயதுடைய ஆரையம்பதியைச் சேர்ந்த ஒருவரை  கைது செய்ததுடன் கடத்தலுக்கு பயன்படுத்திய மீன்பிடி தோணி ஒன்றையும் மீட்டுள்ளனர்.

இதில் கைது செய்யப்பட்டவரை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

spot_imgspot_img

More like this
Related

ஈரான் தூதரை அழைத்து கண்டனம் தெரிவித்தது ஓமான்

தன் மீது நடத்தப்பட்ட தாக்குதலைத் தொடர்ந்து, ஈரான் தூதரிடம் ஓமான் ஞாயிற்றுக்கிழமை...

மாணவர்களை டெங்கு காய்ச்சலிலிருந்து பாதுகாக்க, சீருடை விதிகளைத் தளர்த்த பாடசாலைகளுக்கு அனுமதி

டெங்குவிலிருந்து மாணவர்களைப் பாதுகாக்கும் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, நுளம்புக்கடியிலிருந்து சிறந்த பாதுகாப்பை...

சம்பந்தனுக்கு பொது இடத்தில் நினைவுத்தூபி அமைக்கக்கூடாது

இலங்கை தமிழரசு கட்சியின் மறைந்த முன்னாள் தலைவர் இரா. சம்பந்தன் இரண்டு...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்