யாழ் பல்கலை மன்மதலீலைகளை விசாரிக்கக்கோரி போராட்டம்

Date:

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் பாலியல் துஸ்பிரயோகம் தொடர்பிலான குற்றச்சாட்டு தொடர்பில் பேராசிரியர் உள்ளிட்ட இருவருக்கு எதிராக முன்னெடுக்கப்படும் விசாரணைகளை காலத்தை இழுத்தடிக்காது, துரித படுத்த கோரி , பல்கலை முன்றலில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

யாழ்ப்பாண பல்கலைக்கழக முன்றலில் இன்றைய தினம் வியாழக்கிழமை காலை “பாலியல் வன்முறைகளுக்கு எதிரான மக்கள் இயக்கம்” எனும் அமைப்பின் அழைப்பில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

யாழ்ப்பாண பல்கலைக்கழக பேராசிரியர் உள்ளிட்ட இருவர் மாணவிகளை துஸ்பிரயோகங்களுக்கு உள்ளாக்கினார்கள் எனும் குற்றச்சாட்டில் , பல்கலைக்கழக மட்டத்தில் விசாரணை குழு அமைக்கப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

இவ்வாறான நிலையில் ,காலத்தை இழுத்தடிக்காது விசாரணைகளை துரிதப்படுத்த கோரி , பல்கலைக்கழக முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் , “பாதிக்கப்பட்டவர்களின் குரல்களை கேளுங்கள் – அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யுங்கள்’. “பல்கலைக்கழகங்களில் பெண்களின் பாதுகாப்பை உடனடியாக உறுதி செய்ய வேண்டும்” , ” குற்றத்தை மறைக்க சட்டத்தை ஆயுதமாக்காதே … ” கண்ணியத்தை இழந்து கல்வியை பெறும் இடமா யாழ் பல்கலைக்கழகம் “, தமிழர் பண்பாட்டிற்கு உணர்ச்சி கொள்ளும் பல்கலைக்கழகமே பாலியல் சுரண்டல்களுக்கு மௌனம் ஏன் ? ” போன்ற பல்வேறு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

spot_imgspot_img

More like this
Related

மட்டு ஆரையம்பதியில் மட்டக்களப்பு ரவுடி வாள் வெட்டு குழுவைச் சேர்ந்த இருவர் வாள்களுடன் கைது

மட்டு ஆரையம்பதி வம்மிக்கேணி  மாரியம்மன் கோவில் முன்றலில்  கடந்த மாதம் மட்டக்களப்பு...

பைத்தியக்கார ஈரானை கடுமையாக தாக்குவோம்!

ஹோர்முஸ் ஜலசந்தியில் தெஹ்ரான் தொடர்ந்து கப்பல்களைத் தாக்கினால், ஈரான் மீதான அமெரிக்காவின்...

விடுமுறையில் வருபவர்களால் யாழில் அதிகரிக்கும் டெங்கு

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் இந்த வருடத்தின் இதுவரையிலான காலப்பகுதியில் 694 டெங்கு நோயாளர்கள்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்