மட்டக்களப்பு நீதிமன்றிற்கு பலத்த பாதுகாப்புடன் அழைத்து வரப்பட்ட பிள்ளையான் உட்பட 3 பேருக்கு 13 வரை விளக்கமறியல்

Date:

மட்டக்களப்பில் இடம்பெற்ற 3 கொலைச் சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட பிள்ளையான் மற்றும் இராணுவ புலனாய்வு பிரிவின் தகவலாளிகள் இருவரையும் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் இன்று செவ்வாய்க்கிழமை (30) 30-6-2026 மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் சிஐடியினர் ஆஜர்படுத்திய போது அவர்களை  எதிர்வரும் 13 திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார். அதேவேளை அனுராவின் வாயை போல பொய் குற்றச்சாட்டு என பிள்ளையான்  தெரிவித்தார்.

கிழக்கு பல்கலைக்கழக முன்னாள் உபவேந்தர் பேராசிரியர் சுப்பிரமணியம் ரவீந்திரநாத்  கடத்தப்பட்டு காணாமல் போன சம்பவங்கள் தொடர்பில் சந்தேகத்தின் அடிப்படையில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான பிள்ளையான் என அழைக்கப்படும் சி.சந்திரகாந்தனை கொழும்பு குற்ற விசாரணைப் பிரிவு (சிஐடியினர் மட்டக்களப்பில் உள்ள அவரது காரியாலயத்தில் வைத்து  கடந்த 2025 ஏப்ரல் 7ம் திகதி சிஐடி யினர் கைது செய்தனர்.

இதனையடுத்து சிஜடி யினர் தொடர் விசாரணையில் பிள்ளையானின்  வழிகாட்டுதலின் கீழ் மட்டக்களப்பு மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் கடத்தப்பட்டதாக கூறப்படும் 5 முக்கிய மனிதக் கொலைகள் தொடர்பான இரகசிய தகவல்களை தெரிய வந்துள்ளது.

வவுணதீவைச் சேர்ந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் சுட்டுக் கொலை, ரி.எம்.வி;.பி கட்சி உறுப்பினர் காத்தான்குடியில் வைத்து சுட்டுக் கொலை, வர்த்தகர் ஒருவரை கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட  சம்பவங்கள் மட்டக்களப்பு பிராந்தியத்தை மையமாகக் கொண்டு திட்டமிட்டு நடத்தப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது இதனுடன் தொடர்புபட்ட காத்தான்குடியை சேர்ந்த முகமட் சிபான், மற்றும் முகமட் சகீத், ஆகியோரை கடந்த கடந்த 2025 நவம்பர் மாதம் சிஜடி கைது செய்தனர்.

இந்த 3 கொலை சம்பவத்தில்; பிள்ளையான் மற்றும் பொலிஸ் பாயிஸ், முகமட் சிபான், மற்றும் முகமட் சகீத், தொடர்புபட்டுள்ளனர் இந்த நான்கு பேருக்கும் எதிராக மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் கடந்த 15ம் திகதி சிஜடி யினர் வழக்கு தாக்கல் செய்ததையடுத்து வழக்கை விசாரணைக்கு நீதவான் எடுத்து கொண்டார்.

இதன் போது இராணுவ புலனாய்வு பிரிவின் தகவலாளிகள் இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பிள்ளையானை பாதுகாப்பு காரணங்களுக்காக அழைத்து வரவில்லை என சிஜடி யினர் தெரிவித்ததையடுத்து   நீதவான் அடுத்த தவணைக்கு பிள்ளையானை நீதிமன்றில் ஆஜர்படுத்துமாறு சிஜடி யினருக்கு உத்தரவிட்டு பிள்ளையான் உட்பட 3 பேரையும் 30 ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்

இதனை தொடர்ந்து குறித்த வழக்கு விசாரணைக்காக இன்று செவ்வாய்க்கிழமை விசேட அதிரடிப்படையினர் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் மட்டக்களப்பு நீதிமன்றத்துக்கு பிள்ளையான் உட்பட 3 பேரையும் அழைத்துவரப்பட்டு நீதிமன்றில் ஆஜர்படுத்தினர்

இதன் போது வழக்கை விசாரணைக்கு எடுத்து கொண்ட போது பிள்ளையான் தரப்பில் ஆஜராகிய சட்டத்தரணிகள் பிள்ளையானுக்கு எதிராக சிஜடி யினர் தொடரப்பட்ட வழக்கு மட்டக்களப்பில் இடம்பெற்றுள்ளதாகவும் கடந்த 2015ம் திகதி மட்டக்களப்பில் பிள்ளையானுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கிற்கு அவரை மட்டு சிறையில் வைக்கப்பட்டுள்ளதாகவும்.

தற்போது வெலிசறை கடற்படை சிறையில் சிறை கைதிகளுக்கான உரிமைகள் வழங்கப்படுகிறது என சந்தேகிப்பதாகவும் அவர் ஒரு பாராளுமன்ற உறுப்பினராகவும்  அமைச்சராகவும் இருந்தவர் எனவே அவரின் நலன் கொண்டு அவரை மட்டு சிறைச்சாலையில் வைக்குமாறு  நீதவானிடம் கோரினர். இதேவேளை சந்தேக நபரான  முகமட் சகீத் தனக்கு வாக்குமூலம் அளிப்பதற்கு நேரம் கேட்டதை அடுத்து நீதவான் வாக்கு மூலத்தை வழங்குமாறு தெரிவித்து 3 பேரையும் எதிர்வரும் 13 ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டதுடன் பிள்ளையானுக்கு எதிராக கடந்த 2024 ம் ஆண்டு கல்லடி பாலத்திற்கு அருகில் தனியார் காணியில் உள்நுழைந்து வேலிகளை பிடுங்கிய சம்பவம் தொடர்பான வழக்கை எதிர்வரும் ஜப்பசி மாதம் 19 ம் திகதிக்கு ஒத்திவைத்தார்.

இதேவேளை பிள்ளையானை நீதிமன்றத்துக்கு அழைத்துவருவதையிட்டு நீதிமன்றத்துக்கு செல்லும் ஒவ்வொருவரையும் பொலிசார் தீவிர சோதனை செய்து கொண்டதுடன் நீதிமன்ற கட்டிடத் தொகுதியை சுற்றி பொலிசாரும் விசேட அதிரடிப்படையினரும் பலத்த பாதுகாப்பில் ஈடுபட்டதுடன் பிள்ளையானை காண்பதற்காக அவருடைய கட்சி உறுப்பினர்கள் ஆதரவாளர்கள் நீதிமன்றத்துக்குள் படையெடுத்து கொண்டதுடன் சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லும் போது எல்லாம் பொய் அனுரா வாயைப் போல பொய் என பிள்ளையான் தெரிவித்துள்ளார்.

spot_imgspot_img

More like this
Related

உண்ணாவிரதத்தை முடித்தார் சுரேஷ் சல்லே

உண்ணாவிரதத்தை முடித்தார் சுரேஷ் சல்லே உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் தொடர்பான விசாரணைகளின்...

காதார விழிப்புணர்வில் மதத் தலைவர்களின் ஒத்துழைப்பு மிகவும் அவசியமாகும்: பிராந்திய பணிப்பாளர் தெரிவிப்பு

கல்முனை பிராந்திய மக்களின் ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வை கருத்தில் கொண்டு மேற்கொள்ளப்படும்,...

தாந்தாமலை முருகன் ஆலய பூர்வீக வரலாற்றை சில தமிழ் அரசியல்வாதிகள் திரிவுபடுத்தி சீர்குழைக்கின்றனர்

மட்டக்களப்பு தாந்தாமலை ஸ்ரீ  முருகன் கோவிலுக்கு வெளிநாட்டு தூதுவர்களை அழைத்து வந்து...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்