கூட்டணியை வைகோ முறித்த 24 மணி நேரத்தில் திமுகவில் இணைந்த 150 மதிமுக மூத்த தலைவர்கள்

Date:

தி​முக கூட்​ட​ணி​யில் இருந்து மதி​முக வில​கு​வ​தாக வைகோ அறி​வித்த அடுத்த 24 மணி நேரத்துக்​குள், மதி​முக​வின் மூத்த தலை​வர்​கள் உள்​ளிட்ட 150-க்​கும் மேற்​பட்ட முக்​கிய நிர்​வாகி​கள் திமுக​வில் நேற்று அதி​காரப்​பூர்​வ​மாக இணைந்​தனர்.

கடந்த 2022-ம் ஆண்டு மதி​முக​வுக்​குள் தனது மகன் துரை வைகோவை அக்​கட்​சி​யின் பொதுச்​செய​லா​ளர் வைகோ கொண்டு வந்​ததோடு, அவருக்கு முதன்​மைச் செய​லா​ளர் பதவியை​யும் வழங்​கி​னார்.

இதற்கு எதிர்ப்பு தெரி​வித்த கட்​சி​யின் மூத்த நிர்​வாகி​கள் திருப்​பூர் துரை​சாமி, டி.ஆர்​.ஆர்​.செங்​குட்​டு​வன், புல​வர் செ.செவந்​தி​யப்​பன், பொடா அழகுசுந்​தரம் உள்​ளிட்​ட​வர்​கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்​கப்​பட்​டது.

அதிருப்தி நிர்​வாகி​கள் பலரும் நீண்ட நாட்​களாகவே திமுக​வில் இணைய முயற்சி செய்து வந்​தனர். ஆனால், திமுக கூட்​ட​ணி​யில் மதி​முக நீடித்​த​தால், அதிருப்​தி​யாளர்​களைக் கட்​சி​யில் இணைக்க திமுக தலை​வர் மு.க.ஸ்​டா​லின் தொடர்ந்து மறுத்து வந்​தார்.

இந்​நிலை​யில், திமுக கூட்​ட​ணியி​லிருந்து வில​கு​வ​தாக சென்​னை​யில் நேற்று முன்​தினம் நடை​பெற்ற மதி​முக பொதுக்​குழு கூட்​டத்​தில், தீர்​மானம் நிறைவேற்​றப்​பட்​டது. இதையடுத்து மதி​முக அதிருப்தி நிர்​வாகி​களை இணைத்​துக் கொள்ள திமுக தலைமை பச்​சைக் கொடி காட்​டியது.

இதனைத் தொடர்ந்து நேற்று அண்ணா அறி​வால​யத்​தில் ஸ்டா​லினைச் சந்​தித்த மதி​முக முன்​னாள் மாநில, மாவட்ட நிர்​வாகி​கள் தங்​களை திமுக​வில் இணைத்​துக் கொண்​டனர்.

முக்​கிய​மாக, மதி​முக​வின் மூத்த தலை​வர்​களான புல​வர் செ. செவந்​தி​யப்​பன், டி.ஆர்​.ஆர்​.செங்​குட்​டு​வன், பொடா அழகுசுந்​தரம், ஆர்​.எம்​.எஸ்​.சேகர், விடு​தலை​வேந்​தன், டி.ஆர்​.ஆர்​.ம​தி​யழகன் என சிவகங்​கை, திரு​வள்​ளூர், விருதுநகர், திருப்​பூர் ஆகிய மாவட்​டங்​களைச் சேர்ந்த வழக்​கறிஞர்​கள், முக்​கிய நிர்​வாகி​கள் 150-க்​கும் மேற்​பட்​டோர் திமுக​வில் ஐக்​கிய​மாகினர்.

அழகுசுந்​தரம், புல​வர் செவந்​தி​யப்​பன் ஆகியோர் வைகோவுடன் பொடா சட்​டத்​தில் கைது செய்​யப்​பட்டு ஓராண்​டு​களுக்​கும் மேலாகச் சிறை​வாசம் அனுப​வித்​தனர்.

மு.க.ஸ்​டா​லின் பேச்சு

“தமிழகத்​தில் எந்த நேரத்​தி​லும் தேர்​தல் வரலாம். நாம் அதற்கு 100 சதவீதம் தயாராக இருக்க வேண்​டும்’” என திமுக தலை​வர் மு.க ஸ்டாலின் அக்​கட்சி தொண்​டர்​களுக்கு அறி​வுறுத்​தி​யுள்​ளார். அதி​முக முன்​னாள் அமைச்​சர் பா.பெஞ்​சமின், அண்​மை​யில் திமுக​வில் இணைந்​தார்.

இதையடுத்​து, அவரது தலை​மை​யில் ஆதர​வாளர்​கள் திமுக​வில் இணை​யும் நிகழ்ச்​சி, சென்னை வானகரத்​தில் நேற்று நடை​பெற்​றது. கட்​சி​யில் இணைந்​தவர்​களை வரவேற்று திமுக தலை​வர் மு.க.ஸ்​டா​லின் பேசி​ய​தாவது:

திமுக ஆட்​சி​யில் கொண்​டு​ வரப்​பட்ட மகளிர் உரிமைத் தொகை போன்ற மக்​கள் நலத் திட்​டங்​களை இனி யாராலும் மக்​களிட​மிருந்து பறிக்​கவோ, நிறுத்​தவோ முடி​யாது. அந்த திட்​டங்​கள் தமிழகத்​தில் இருக்​கிற வரை, இந்த ஸ்டா​லினின் பெயரும் மக்​கள் மனதில் நிலைத்​திருக்​கும். அது​தான் இந்த இயக்​கத்​துக்​கும், உங்​களுக்​கும் பெரு​மை.

தமிழகத்​தில் தேர்​தல் எப்​போது வேண்​டு​மா​னாலும் வரலாம் என்​பதை நினை​வில் வைத்​துக் கொள்​ளுங்​கள். 3 அல்​லது 6 மாதங்​கள் கழித்​து​கூட தேர்​தல்வரலாம்.

ஏனெனில், தற்​போது உள்ள புதிய ஆட்சி மக்​களின் முழு​மை​யான பெரும்​பான்​மையோடு வெற்றி பெற்​றது அல்ல. எப்​போது தேர்​தல் வந்​தா​லும் நாம் 100 சதவீதம் தயா​ராக இருக்க வேண்​டும். தி​முக​வின் வெற்​றிக்​காக இந்​த நிமிடம்​ முதலே உழைக்​கத்​ தொடங்​குங்​கள் என்று அவர்​ பேசி​னார்​.

spot_imgspot_img

More like this
Related

போசன் தான்சாலைகள் 18,000-ஐ தாண்டின; சுகாதார பரிசோதனையில் தீவிரம் காட்டும் PHI அதிகாரிகள்

போசன் பௌர்ணமி விழாவை முன்னிட்டு நாடு முழுவதும் 18,412 தான்சாலைகள் இதுவரை...

நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலய தேர்

நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலய தேர் திருவிழா இன்று(28) சிறப்பாக இடம்பெற்றது. வசந்த...

சவுதி அராம்கோ ஹெலிகாப்டர் விபத்து: 14 உயிர்களை காவுகொண்ட பேரதிர்ச்சி

சவுதி அரேபியாவில் ஹெலிகாப்டர் ஒன்று விபத்துக்குள்ளானதில் குறைந்தது 14 பேர் உயிரிழந்துள்ளதாக...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்