00 புதிய பேருந்துகள் ஆண்டு இறுதிக்குள் SLTB-க்கு

Date:

ஆண்டு இறுதிக்குள் SLTB-க்கு 600 புதிய பேருந்துகள் வழங்கப்படவுள்ளதாக போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சு அறிவித்துள்ளது.

நாடு முழுவதும் பொதுப் போக்குவரத்து சேவையை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் இந்த புதிய பேருந்துகள் இலங்கை போக்குவரத்து சபை (SLTB) சேவையில் இணைக்கப்படவுள்ளன.

புதிய பேருந்துகளில் 200 சொகுசு (Luxury) பேருந்துகள் அதிவேக நெடுஞ்சாலை சேவைகளுக்காகவும், 400 சாதாரண பேருந்துகள் வழக்கமான பயணிகள் சேவைகளுக்காகவும் பயன்படுத்தப்படவுள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது.

இதற்கிடையில், புதிதாக கொள்வனவு செய்யப்பட்டுள்ள 104 மெட்ரோ (Metro) பேருந்துகள் எதிர்வரும் ஆகஸ்ட் 15-ஆம் திகதிக்குள் நாட்டை வந்தடையும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பேருந்துகள் கார்டு அடிப்படையிலான மின்னணு கட்டணச் செலுத்தும் (Electronic Fare Payment) வசதியுடன் அமைக்கப்படவுள்ளதுடன், தேவையான ஏற்பாடுகள் நிறைவடைந்த பின்னர் செப்டம்பர் 20 முதல் பயணிகள் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது.

spot_imgspot_img

More like this
Related

அக்கரைப்பற்று பிரதேச சபையின் புதிய உதவித் தவிசாளராக எம்.எச். சுபைதா உம்மா பதவிப் பிரமாணம்

அக்கரைப்பற்று பிரதேச சபையின் புதிய உதவித் தவிசாளராக எம்.எச். சுபைதா உம்மா...

சாய்ந்தமருதில் உணவகங்கள், வர்த்தக நிலையங்களில் சுகாதார பரிசோதனை

சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் ஜே. மதன் அவர்களின் ஆலோசனை...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்