ஞானசார தேரரின் சிறைத்தண்டனையை உறுதி செய்தது கொழும்பு மேல் நீதிமன்றம்

Date:

இஸ்லாமிய மார்க்கத்தை அவமதிக்கும் வகையில் கருத்து வெளியிட்டு, இனங்களுக்கு இடையிலான நல்லிணக்கத்தைச் சீர்குலைக்க செயற்பட்டார் என்ற குற்றச்சாட்டின் கீழ், பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு கொழும்பு நீதவான் நீதிமன்றம் விதித்த 9 மாத சிறைத்தண்டனையை கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (23) உறுதி செய்துள்ளது.

சிறைத்தண்டனையிலிருந்து தன்னை விடுவிக்குமாறு கோரி ஞானசார தேரரினால் தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீட்டு மனுவை நிராகரித்து, கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மஞ்சுள திலகரத்ன இந்தத் தீர்ப்பை வழங்கியுள்ளார்.

கடந்த 2016ஆம் ஆண்டு கிருலப்பனைப் பகுதியில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில், இஸ்லாமிய மார்க்கத்தை அவமதிக்கும் வகையில் கருத்து வெளியிட்டு, இனங்களுக்கு இடையிலான நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் வகையில் செயற்பட்டார் எனக் குற்றம் சுமத்தி, தண்டனைச் சட்டக்கோவையின் கீழ் பொலிஸாரினால் ஞானசார தேரருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

வழக்கு விசாரணைகளின் பின்னர், இந்தக் குற்றச்சாட்டிற்கு அவர் குற்றவாளியாகக் காணப்பட்டதை அடுத்து கொழும்பு நீதவான் நீதிமன்றத்தினால் இந்தத் தண்டனை விதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

spot_imgspot_img

More like this
Related

நீதிமன்றத்தில் அம்பலமாகும் மஹிந்த குடும்பத்தின் அதிர வைக்கும் ஊழல்கள்!

கொழும்பில் உள்ள லேடி ரிட்ஜ்வே (Lady Ridgeway) சிறுவர் மருத்துவமனைக்கு CT...

பிள்ளையான், கூட்டாளிகளுக்கு தொடர்ந்து விளக்கமறியல்

மட்டக்களப்பில் கடந்த 2008 ம் ஆண்டு ரி 56 ரக துப்பாக்கியால்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்