கள்ளமண்காரரை காப்பாற்ற முயன்ற 14 பேர் கைது!

Date:

கிளிநொச்சி உமையாள்புரம் பகுதியில் சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்டவர்களை கைது செய்ய முயன்ற விசேட அதிரடிபடையினரை தாக்கி, கடமைக்கு இடையூறு விளைவித்த குழந்தைகள், முதியோர்கள், பாடசாலை மாணவிகள் என 14 பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

குறித்த பிரதேசத்தில் இடம்பெற்ற சட்டவிரோத மணல் அகழ்வை தடுக்கும் நோக்கில் சம்பவ இடத்திற்கு சென்ற விசேட அதிரடிப்படையினர் காட்டுக்குள் உழவு இயந்திரத்துடன் ஒருவரை கைது செய்ய முற்பட்ட போது, அவரது உறவினர்கள் அவரை காப்பாற்றவும், விசேட அதிரடிப்படையினரை தாக்கவும் முற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

இதன் போது விசேட அதிரடிப்படையினரை கைது செய்யப்பட்டவரின் உறவினர்கள் அயலவர்கள் தாக்கியதாகவும், இதையடுத்து வன்முறையில் ஈடுபட்டவர்கள் மீது விசேட அதிரடிப்படையினர் தாக்குதல் நடத்தி, அனைவரையும் கைது செய்து கிளிநொச்சி நீதி மன்றில் இன்று ஞாயிற்றுக்கிழமை முற்படுத்தினர். அவர்களை நாளை திங்கள் வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டது.

இதன்போது சிறு குழந்தைகள் இருவர், அவர்களது தாய் தந்தை மற்றும் பாடசாலை மாணவிகள் இருவர், முதியவர்கள் என 14 பேர் இவ்வாறு விளக்கமறியில் வைக்கப்பட்டுள்ளனர்.

spot_imgspot_img

More like this
Related

பல்கலை, உயர்கல்வி நிறுவனங்களில் விடுதி வசதிகளை விரிவுபடுத்த திட்டம்

இன்று (08) நாடாளுமன்றத்தில் உரையாற்றிய பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, 2026...

பயங்கரவாதத்திலிருந்து அரசை பாதுகாக்கும் சட்டமூலத்திற்கு எதிராக மனு!

அரசாங்கத்தால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட பயங்கரவாதத்திலிருந்து அரசை பாதுகாக்கும் சட்டமூலத்தை சவாலுக்கு உட்படுத்தி...

மதுபானசாலைகளற்ற வலி வடக்கில் மதுபானசாலைக்கு அனுமதியா?” — வீதியில் இறங்கிய மக்கள்

மதுபானசாலைகளற்ற பிரதேசமாக காணப்படும் வலி வடக்கில் புதிய மதுபானசாலைக்கு அனுமதி வழங்கப்படுவதற்கு...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்