ஆர்ப்பாட்டங்கள் கொடி பிடித்தல் அறிக்கை அரசியலும் தமிழர்களுக்கு ஒரு தீர்வையும் தராது– மட்டு மாநகர சபையின் முன்னாள் முதல்வர் ரி.சரவணபவான்–
ஜே.பி தமிழ் மக்களின் போராட்டத்தை சிதைத்த ஒரு கட்சி ஆகவே ஆர்ப்பாட்டங்கள் கொடி பிடித்தல் அறிக்கை அரசியலும் தமிழ் மக்களுக்கு ஒரு தீர்வையும் தராது என்பதுடன் பலருக்கு தமிழ் தேசியம் ஒரு பிழைப்பு எனவே பிழைப்பு அரசியலுக்கு நாங்கள் வரக்கூடாது சரியான கொள்கையுடன் பயனிக்க வேண்டும் எங்கள் மக்களின் இன விடுதலைக்காக, சரியான முறையில் நாங்கள் செயல்படவேண்டும். என மட்டு மாநகர சபையின் முன்னாள் முதல்வர் ரி.சரவணபவன் தெரிவித்தார்
தமிழ் மக்களுக்கு எதிரான முதலாவது இனப்படுகொலையின் 70 ஆண்டு நினைவேந்தல் மட்டு அமெரிக்கன் மிஷன் மண்டபத்தில் சிவில் சமூக செயற்பாட்டாளர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் நேற்று வியாழக்கிழமை (11) இடம்பெற்றது இதில் உரையாற்றுகையில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.
வரலாறுகள் மழுங்கடிக்க படுவதும் திரிவுபடுத்தப்படுவதும் தமிழினத்தின் மீது பாரியளவில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது மகாவம்சத்தில் விஜயன் வருமுன் இங்கு தமிழர்கள் இருக்கவில்லை என எழுதப்பட்டுள்ளது
ஆனால் எங்களுக்கு கிடைத்த அந்த தொல்பொருள் ஆவணங்கள் மிக தெளிவாக வலியுறுத்தியிருந்தது விஜயன் வரும் முன்பே இங்கு தமிழர்கள் கலாச்சாரத்துடன் இயங்கிய ஒரு கட்டமைப்பாக இருந்தவர்கள் என இவ்வாறான நிகழ்வை ஏற்பாடு செய்து வரலாறுகளை அடுத்த சந்ததிக்கு கொண்டதற்கான முயற்சிகளை மேற்கொண்டவர்களுக்கு நன்றிகள்
இலங்கை அரசாங்கம் திட்டமிடப்பட்ட கட்டமைக்கப்பட்ட இன அழிப்பை நடாத்திக் கொண்டிருக்கும் இந்த வேளையில் நாங்கள் உங்களுக்குள் கேட்க வேண்டும் நாங்கள் சரியாக எங்கள் வேலைகளை செய்கின்றோமா ? வெறுமனவே குற்றங்களை மட்டும் சாட்டாமல் எங்களது பக்கத்தில் இருந்த பிழைகளை நாங்கள் திருத்திக் கொள்கின்றோமா? என்ற கேள்வி எங்களுக்கு இருக்கின்றது.
கல்லோயா திட்டம் குடியேற்றும் போது இலங்கையில் நில பங்கீடு எந்த சட்டத்துகள் இருந்ததே அந்த சட்டத்துகள் தான் பகீடு செய்யப்பட்டுள்ளது அந்த வகையில் நில பகீடு பங்கிடப்படும் போது இங்கு எமது இன விகிதாசாரம் பேணப்படவில்லை என நாங்கள் அறிக்கைகள் வாயிலாக மேடை பேச்சுக்களிலும் சொல்லியிருக்காமல் சட்டரீதியாக நடமுறைக்கு போயிருக்கலாம் என்பது எனது வாதம். சட்டரீதியான நடைமுறைக்கு போயிருந்தால் அந்த குடியேற்ற திட்டத்தின் வேகத்தை குறைத்திருக்கலாம்.
அதேவேளை நிலம் சார்ந்த காணி சம்பந்தப்பட்ட அரச உத்தியோகத்தர்கள் அந்த பிரதேசத்தில் சரியான ஒரு பதிவுகளை மேற்கொண்டிருந்தால் சவாலுக்கு உற்படுத்தியிருக்கலாம் பரம்பரை ரீதியாக வாழ்ந்தவர்களை வெளியேற்றி வெளி ஊர்களில் இருந்து ஆட்களை குடியேற்றுவதற்கான ஏற்பாடு எந்த இடத்திலும் இல்லை
அந்த பதிவுகள் இருந்திருந்தால் சவாலுக்கு உற்படுத்தி இருக்கலாம் ஆனால் எமது உத்தியோகத்தர்கள் அந்த பதிவுகளை மேற்கொள்ளவில்லை அந்த பதிவுகளை செய்ய வேண்டும் என எமது மக்களும் அதை செய்யவில்லை அதனால் இந்த திட்டம் மிக வேகமாக நகர்ந்து வந்துள்ளது. நாங்கள் அதை அங்கு விட்டோம் ஆனால் அதை தொடர்ச்சியாக செய்து வருகிறோம்
ஒரு கட்டத்தில் 50 ஏக்கர் ஒரு குடும்பத்துக்கும் வழங்க கூடிய ஏற்பாடு இருந்தது வடகிழக்கில் இருந்த இயங்கிய வேலை செய்த அந்த உத்தியோகத்தர்கள் சரியாக அந்த 50 ஏக்கர் ஒரு பொமிற்றைப் போட்டு
ஒவ்வொரு குடும்பத்துக்கும் வழங்கியிருந்தால் சரியாக ஒரு வருடத்தில் காணிக்கான ஆவணத்தை பெற்றுக் கொள்ள முடியும் அதை விண்ணப்பித்தமா? காணிக்கான (பொமிற்) கொடுத்தோமா? இல்லை
நாங்கள் பிழையைத்தான் கதைத்து கொண்டிருக்கின்றோம் எங்கள் பக்கத்தில் விட்ட பிழையை இன்னும் திருத்தவில்லை அதற்கான முயற்சியை எடுக்கவில்லை. ஒரு கட்டத்தில் எங்கள் கைக்குள் முழுவதும் இருந்தது அந்த காலத்தில் அதிகாரத்தில் இருந்தவர்கள் கூப்பிட்டு இந்த இந்த இடத்தில் அரச காணிகள் இருக்கிறது இப்படி பிரித்துக் கொடுங்கள் என்று சொல்லியிருந்தால் நடந்திருக்கும்.
அந்த உத்தியோகத்தர்களை வழிப்படுத்தியிருந்தால் பொமிற் போடப்பட்டிருக்கும் அதை செய்திருந்தால் இன்று நிலத்துக்கான ஆவணத்தை எடுத்திருக்கலாம் செய்தோமா? செய்யவில்லை .
அரசாங்கம் குடியேற்றத் திட்டத்தை கொண்டுவருகின்றது நாங்கள் பேர்கொடி தூக்குகின்றோம் ஆனால் எங்களிடம் இருந்த அந்த அதிகாரத்தை அப்போது தூக்கி கொடுத்துவிட்டு இப்போது தேடித்திரிகிறோம்
எனவே இனிமேல் நாங்கள் அந்த பிழைகளை விடக்கூடாது ஒன்று சேர்ந்து இவ்வாறான விஷயங்களுக்கு ஒரு செயற்பாட்டை செய்யவேண்டும் வெறுமனவே ஆர்ப்பாட்டங்கள் கொடி பிடித்தல் போட்டி மற்றும் அறிக்கை அரசியலும் இங்கு ஒரு தீர்வையும் தராது சட்டரீதியான செயற்பாடுகளை நாங்கள் முன்னெடுக்க வேண்டும்
மாகாணசபை முறைமை வந்தவுடன் சில ஏற்பாடு இருந்தது அதை எடுத்தமா? மாகாணசபைக்கு நீர்ப்பாசன திணைக்களத்தை பிரேமதாஸ தரவில்லை ஆனால் அப்போது ஆட்சி செய்தவர்கள் வழக்கு ஒன்றை போட்டு வழக்கு மூலம் நீர்பாசன திணைக்களம் மாகாண சபைக்குள் வந்தது
எனவே சட்டரீதியாக சவாலுக்கு உட்படுத்த வேண்டிய விஷயங்கள் உட்படுத்தி சவாலுக்கு போக வேண்டும் சரியாக உத்தியோகத்தர்கள் உங்கள் வேலையை செய்ய வேண்டும் அவ்வாறே அரசியல்வாதிகள் தங்கள் கடமையை செய்ய வேண்டும் இதற்கு காரணம் ஒருதரிடமும் என்ன செய்தீர்கள் என்ன செய்ய போறீங்கள், என்ற கேள்வி இல்லை இது தான் எங்களிடம் இருக்கும் ஒரு குறைபாடு.
இந்த படுகொலையை கொண்டு போக வேண்டும் என 4 பேருக்கு சொல்லுகின்றோம் ஆனால் வெளியில் அந்த இளைஞர்களது மீடியா வேறு அவர்களது மீடியாவுக்கு என்ன வகையில் கொடுக்க வேண்டுமே அந்த வகையில் கொடுக்காவிட்டால் என்.பி.பி க்கு வாக்களித்துவிட்டு போவார்கள் எங்களுடைய தலைவரை வைத்து பாட்டு போட்டார்கள் என்ன தமிழ் தேசியத்தை வளர்த்திருக்கிறோம்.
ஜே.பி எங்கள் போராட்டத்தை சிதைத்த ஒரு கட்சி சுனாமி மீள் கட்டமைப்பு க்கு பணம் கொடுக்க கூடாது என இராஜனமா செய்து விட்டு போனவர்தான் இந்த அனுரகுமார திஸநாயக்க அவருக்கு நாங்கள் மட்டக்களப்பில் வாக்களித்துள்ளோம் அவருடைய கட்சிக்கு வாக்களித்து நாடாளுமன்ற உறுப்பினரை தெரிவு செய்துள்ளோம் எங்களிடம் என்ன தேசியம் இருக்கு?
தேசியம் இல்லை என்றதற்கு இளைஞர்களில் பிழையில்லை அவர்களுக்கு அந்த கோணத்தில் மீடியாவை கொடுக்கவில்லை இந்த மண்ணுக்காக எத்தனையோ மாவீரர்கள் இறந்துள்ளனர் எனவே நாங்கள் விடுகின்ற பிழைகள் எல்லாம் அந்த ஆத்மாவுக்கு துரோகம் செய்கின்றோம.; எங்கள் ஒவ்வொரு செயற்பாடும் எங்கள் விடுதலைக்கு என்ன பங்களிப்பு செய்யும் என்ற வழியில் நாங்கள் எங்கள் செயற்பாடுகளை செய்ய வேண்டும் வெறுமனவே பிழைப்புக்கான தமிழ் தேசியத்தை நடத்தாது மக்கள் சார்ந் செயற்பாடை நாங்கள் செய்தால் தான் எங்கள் சமூகத்தை கட்ட மைக்கலாம்.
சரியாக வழி படுத்தப்பட்டிருந்த ஒரு போராளி எப்படி ஆமியுடன் இணைவது ஆமியுடன் போய் இருக்கின்றார் என்றால் அவர் வழி நடத்தப்படவில்லை அல்லது சுயநலமாக வந்து சேர்ந்துள்ளார். நாங்கள் போராளி அல்ல ஆனால் நாங்கள் தமிழ் தேசியத்துக்கு அப்பால் சிந்திக்கவில்லை இன்று உங்களுடன் நின்று சண்ட பிடிக்கின்றான் நாளை இராணுவத்துடன் சேர்ந்து சண்டை பிடிக்கிறான் எனவே என்ன உணர்வு தமிழ் தேசிய உணர்வு ஊட்டல் சரியாக போக வேண்டும் .
அவனுக்கு என்ன பாஷையில் கொடுக்க வேண்டுமே இந்த பாஷையில் கொடுக்க வேண்டும் இல்லாவிட்டால் ஒவ்வொரு தேர்தலிலும் எங்கள் இளைஞர்கள் வேறு வேறு பக்கம் போவார்கள் ஈஸ்ரர் குண்டு தாக்குதல் என குற்றம்சாட்டப்படுகிறது இவர் அவரை இவரை கொலை செய்தார் என்கின்றனர் ஆனால் அவருக்கு 65 ஆயிரம் வாக்கு விழுந்துள்ளது அதற்கு பிழை எங்கள் பக்கம் நாங்கள் இளைஞர்களுக்கு சரியான விஷயத்தை சொல்லவில்லை எனவே சொல்லவில்லை என்றால் எங்கள் பயணம் பிழைக்கும்;
இணைந்த வடகிழக்கில் தமிழ் ஈழத்தை கேட்டுவிட்டு இப்போ நாங்கள் ஊருக்குள் பிரதேசவாதம், சாதிவாதம், மதவாதம் பேசுகின்றனர் எனவே மதவாதம் சாதிவாதம் பிரதேசவாதம் எங்களுக்குள் வரக்கூடாது தமிழனாக ஒன்றாகவேண்டும் அப்படி ஒன்றாவில்லை என்றால் நாங்கள் தோற்ற சமூகமாக மாறும் என்றார்.




