கணவன், பிள்ளைகளை கழற்றிவிட்டு வந்த பெண், காதலன் மீது நம்பிக்கைத்துரோக வழக்கு!

Date:

திருமணத்திற்கு புறம்பான உறவில் உருவான காதல், நம்பிக்கைத்துரோகம் செய்துவிட்டதாக இளம்பெண்ணொருவர் நீதிமன்றத்தை நாடியுள்ளார்.

யாழ்ப்பாணத்தில் இந்த சம்பவம் நடந்தது.

வவுனியாவை சேர்ந்த 36 வயதான பெண்ணொருவர் திருமணமாகி, 2 பிள்ளைகளுடன் வசித்து வந்துள்ளார். எனினும், அவருக்கு யாழ்ப்பாணத்தை சேர்ந்த 27 வயதான இளைஞன் ஒருவருடன் திருமணத்திற்கு புறம்பான உறவு ஏற்பட்டது.

யாழ்ப்பாண காதலனுக்காக, தனது கணவன், பிள்ளைகளை உதறிவிட்டு, ஓடி வந்த அந்தப் பெண், யாழ்ப்பாணத்தில் காதலனுடன் வசித்து வந்தார்.

இந்த நிலையில், சில மாதங்களிலேயே காதலனுடனான உறவு கசந்து, அந்தப் பெண் நீதிமன்றத்தை நாடியுள்ளார்.

தானும், காதலனும் உல்லாசமாக இருந்த சமயங்களில், இதை காதலன் படம்பிடித்து வைத்திருந்ததாகவும், அதை தற்போது தனது நண்பர்கள் வட்டாரங்களில் கசிய விட்டு, நம்பிக்கைத்துரோகம் செய்துவிட்டதாகவும் அந்தப் பெண் குற்றம்சாட்டியுள்ளார்.

காதலன் நம்பிக்கை மோசடி செய்ததாக குறிப்பிட்டு, அந்தப் பெண் தற்போது யாழ் மாவட்டத்திலுள்ள நீதிமன்றமொன்றில் சட்டநடவடிக்கையை ஆரம்பித்துள்ளார்.

spot_imgspot_img

More like this
Related

எம்.பி. பதவியிலிருந்து எம்.எஸ். அப்துல் வாஸித் இராஜினாமா! கட்சியினால் அமானிதமாக வழங்கப்பட்ட பதவியை மீண்டும் கட்சியிடம் ஒப்படைத்தார்

ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியினால் அமானிதமாக வழங்கப்பட்ட தேசியப் பட்டியல்...

மஹிந்த கூட்டத்தை புகழ்ந்து பாடிய பைத்தியத்தை தெளிய வைப்போம்

யாழ்ப்பாணத்தில்; இருந்து சென்ற ஒரு பைத்தியம் முள்ளிவாய்க்கால் மட்டுமல்ல வடக்கு கிழக்கு...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்