“எங்களுக்குள் இருந்தது கருத்து வேறுபாடு தானே தவிர, பிளவு இல்லை” – எஸ்.பி.வேலுமணி விளக்கம்

Date:

“எங்களுக்குள் இருந்தது கருத்து வேறுபாடு தானே தவிர, பிளவு இல்லை. அந்த கருத்து வேறுபாடுகள் இப்போது நீங்கிவிட்டன. இனி ஒற்றுமையாக அதிமுக வலுவாக செயல்படும்” என அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்தார்.

அதிமுகவில் தனியாக செயல்பட்ட வேலுமணி அணி, பழனிசாமி அணியுடன் மீண்டும் இணைந்தது. அதன்பின்னர், அனைவரும் கூட்டாக பழனிசாமியை அதிமுக சட்டப்பேரவைக் குழு தலைவராகவும், அக்ரி கிருஷ்ணமூர்த்தியை கொறடாவாகவும் நியமிக்க கோரி சபாநாயகர் ஜேசிடி பிரபாகரிடம் கடிதம் அளித்தனர்.

இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய எஸ்.பி.வேலுமணி, “ கருத்து வேறுபாடு காரணமாக நம்பிக்கை வாக்கெடுப்பில் தவெக அரசுக்கு ஆதரவளித்தோம். அதனையடுத்து இரு தரப்பிலும் தகுதி நீக்க மனுக்களை அளித்தோம், இப்போது எங்கள் இரு தரப்பில் கொடுக்கப்பட்ட மனுக்களையும் வாபஸ் பெற்றுவிட்டோம். எங்களுக்குள் சில கருத்து வேறுபாடுகள் இருந்தன. ஆனால், அப்போதும் எங்கள் பொதுச்செயலாளர் பழனிசாமி தான் எனத் தெரிவித்திருந்தோம்.

ஒரு கட்சிக்கு வெற்றி, தோல்விகள் சகஜம். ஆனால், ஜெயலலிதா சொன்னதுபோல அதிமுக நூறாண்டுகள் இருக்க வேண்டுமானால், தோல்வி குறித்து ஆராய்வதற்கு பொதுக்குழுவை கூட்ட வேண்டும், குழு அமைக்க வேண்டும் என கோரிக்கைகளை வைத்திருந்தோம்.

அந்த கோரிக்கைகளை எல்லாம் பரிசீலித்து ஒவ்வொன்றாக செய்வதாக பொதுச்செயலாளர் கூறியுள்ளார். எங்களுக்குள் இருந்தது கருத்து வேறுபாடு தானே தவிர, பிளவு இல்லை. இப்போது எங்களுக்குள் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கிவிட்டது. இனி ஒற்றுமையாக அதிமுக வலுவாக செயல்படும். அனைவரும் ஒற்றுமையாக செயல்பட வேண்டும் என பழனிசாமி எங்களிடம் கோரிக்கை விடுத்தார்.

அதிமுக பொன்விழா கண்ட கட்சி, 31 ஆண்டுகள் ஆளுங்கட்சியாக இருந்தது. நாங்கள் பதவிக்காக தவெகவை ஆதரிக்கவில்லை, இதனை ஆளுங்கட்சியும் தெளிவுப்படுத்தியது. தோல்விக்கு பின்னர் ஆராய்ந்து செயல்பட வேண்டும் என்று தான் நாங்கள் கோரிக்கை வைத்தோம். சி.வி.சண்முகமும் எங்களுடன் தான் இருக்கிறார். நாங்கள் அனைவரும் ஒற்றுமையாக இருக்கிறோம்.” என்று அவர் தெரிவித்துள்ளார்.

spot_imgspot_img

More like this
Related

மக்களை ஏமாற்றும் கடற்தொழில் அமைச்சர்!

யாழ்ப்பாணத்தில் காணி விடுவிப்பு தொடர்பில் இராணுவத்தினர் எந்த விதமான சாதகமான பதிலையும்...

ஆக்கிரமிப்பு இனங்கள் குறித்து எப்போதும் எச்சரிக்கை அவசியம்: பொ.ஐங்கரநேசன்

உலகம் எதிர்கொண்டுள்ள தலையாய சுற்றுச்சூழல் பிரச்சினைகளில் காலநிலை மாற்றத்துக்கு அடுத்து இரண்டாவது...

விகாரைக்குள் சிறுவனை சின்னாபின்னமாக்கிய பிக்கு: தண்டனையை உறுதி செய்த மேல்முறையீட்டு நீதிமன்றம்!

2009 ஆம் ஆண்டில் ஒரு சிறுவனைப் பாலியல் ரீதியாகத் துன்புறுத்திய வழக்கில்,...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்