மாணவியை காப்பாற்ற கடலில் இறங்கிய ஆசிரியர் பலி

Date:

கல்விச் சுற்றுலா ஒன்றின்போது கிரிந்த கடலில் குளித்துக்கொண்டிருந்த மாணவியை அலைகள் அடித்துச் சென்றதால், அவரைக் காப்பாற்ற முயன்றபோது, ​​மொனராகல, பாதல்கும்புர, வைக்கும்புர தமிழ் மகா வித்தியாலத்தின் கணித ஆசிரியர் ஒருவர் கடலில் மூழ்கி உயிரிழந்தார்.

உயிரிழந்தவர், பாதல்கும்புர, அலுபோத்தாவைச் சேர்ந்த, மூன்று பிள்ளைகளின் தந்தையான கணித ஆசிரியர் என். எம். எம். நுஜும் (56) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இந்த பாடசாலையின் அதிபர் மற்றும் பல ஆசிரியர்கள், கல்விச் சுற்றுலாவின்போது மாணவர்களுடன் குளிப்பதற்காக மாலை சுமார் 4.30 மணியளவில் கிரிந்த கடற்கரைக்குச் சென்றிருந்தனர். அங்கு, மாணவி ஒருவர் மூழ்கிக்கொண்டிருப்பதை அவர்கள் கண்டனர். அவரைக் காப்பாற்ற ஆசிரியர் சென்றபோது, ​​இருவரும் நீரில் மூழ்கினர்.

உயிர்காப்பாளர்களும் உள்ளூர் மக்களும் இருவரையும் மீட்டு, தெபராவேவ ஆதார மருத்துவமனையில் சேர்த்தனர். மாணவி உயிர்பிழைத்த போதும், ஆசிரியர் உயிரிழந்தார். மாணவி தற்போது சிகிச்சை பெற்று வருகிறார்.

spot_imgspot_img

More like this
Related

சுரேஷ் சலே விவகாரத்தில் சட்டத்தின் ஆட்சி நிலைநிறுத்தப்பட வேண்டும் – முன்னாள் எம்.பிக்கள் வலியுறுத்தல்

சுரேஷ் சலே விவகாரம்: சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்துமாறு ஜனாதிபதியிடம் முன்னாள் எம்.பிக்கள்...

என்னை நோக்கிய குற்றச்சாட்டுகள் தவறான கணக்கில் வரவு வைக்கப்படுகின்றன – நாமல்

இன்றைய அரசாங்கத்தின் கீழ் பொதுமக்களின் பணம் மட்டுமன்றி, தோல்விகளுக்கான பொறுப்புகளும் குற்றச்சாட்டுகளும்...

இலங்கைக்கு பெருமை: YPO உலகளாவிய வாரியத்தில் முதல் முறையாக நஸ்ரி நிஸார் தேர்வு

76 ஆண்டுகால வரலாற்றில் முதல் முறையாக, Young Presidents’ Organisation (YPO)...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்