மக்களை ஏமாற்றும் கடற்தொழில் அமைச்சர்!

Date:

யாழ்ப்பாணத்தில் காணி விடுவிப்பு தொடர்பில் இராணுவத்தினர் எந்த விதமான சாதகமான பதிலையும் தெரிவிக்காத நிலையில் , கடற்றொழில் அமைச்சர் மக்களை ஏமாற்றும் விதமாக கருத்துக்களை தெரிவித்துள்ளார் என நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் உள்ள தமிழ் தேசிய மக்கள் முன்னணி அலுவலகத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

காணி விடுவிப்பு தொடர்பில் ஆளுநர் செயலகத்தில் பாதுகாப்பு பிரதி அமைச்சரின் பங்கேற்புடன் உயர்மட்ட கூட்டம் நடைபெற்றது. அதில் இராணுவ தரப்பினர் காணி விடுவிப்பு தொடர்பில் எந்தவொரு சாதகமான பதிலையும் தெரிவிக்காமையே கூட்டம் நிறைவடைந்துள்ளது.

மக்கள் எதிர்பார்க்கும் எந்தவொரு முடிவினையும் சாதகமாக எடுக்காமல் , காணி விடுவிப்பு தொடர்பில் இராணுவத்தினர் பல சமயங்களில் திட்டவட்டமாக நிராகரித்தும் , சில விடயங்களில் பரிசீலிப்போம் என தட்டிக்கழிக்கும் பதிலையும் கூறியுள்ளனர் .

மக்கள் எதிர்ப்பார்க்கும் எந்தவொரு விடயமும் சாதகமாக முடிவெடுக்கப்படவில்லை

ஆனால் மூடிய அறைக்குள் நடைபெற்ற கலந்துரையாடல் தொடர்பில் , கடற்தொழில் அமைச்சர் வெளியே வந்து ஊடகங்களுக்கு முன்னால், சாதகமான பல விடயங்கள் நடைபெற்றுள்ளதாகவும் , விரைவில் தீர்வுகள் காணப்படும் என அப்பட்டமான பொய்யை கூறியுள்ளார்.

இந்த பொய்யை மக்கள் மட்டத்தில் விதைக்க தான் தமது கட்சி சாராத மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுக்க வில்லை. அதேபோல வலி. வடக்கு பகுதி தொடர்பில் பேச வலி.வடக்கு பிரதேச சபையினரை அழைத்து இருக்க வேண்டும். அவர்களையும் அழைக்கவில்லை
மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகளை அழைக்காது மூடிய அறைக்குள் மக்கள் பக்கம் இருந்து பேச கூடிய விடயங்களை பேசாது வெளியே வந்து மக்கள் மத்தியில் நம்பிக்கையை விதைக்கும் வகையில் பொய்யை சொன்னது கண்டிக்கப்பட கூடிய விடயம் என தெரிவித்தார்.

spot_imgspot_img

More like this
Related

“கிளீன் ஸ்ரீலங்கா” திட்டத்தின் கீழ் அச்சுவேலி வைத்தியசாலையில் தூய்மைப் பணி

அரசாங்கத்தின் “கிளீன் ஸ்ரீலங்கா” (Clean Sri Lanka) வேலைத்திட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்படும்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்