பிரதமர் மோடியுடன் முதல்வர் விஜய் சந்திப்பு – தமிழக அரசின் கோரிக்கைகள் குறித்த மனு அளிப்பு

Date:

பிரதமர் நரேந்திர மோடியை முதல்வர் விஜய் சந்தித்துப் பேசினார். அப்போது, தமிழக அரசின் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை பிரதமர் மோடியிடம் முதல்வர் விஜய் அளித்தார்.

தமிழக முதல்வராக விஜய் பொறுப்பேற்ற பின்னர், முதன்முறையாக பிரதமர் நரேந்திர மோடியை சந்திப்பதற்காக சென்னையில் இருந்து இன்று காலை டெல்லி புறப்பட்டுச் சென்றார்.

இரண்டு நாள் பயணமாக டெல்லி வந்த அவரை, டெல்லி தமிழ்நாடு இல்லத்தில், தமிழக தலைமைச் செயலர் சாய் குமார் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். இதையடுத்து, காவல் துறை அணிவகுப்பு மரியாதையும் விஜய்க்கு அளிக்கப்பட்டது.

இதையடுத்து, பிரதமர் மோடியுடனான சந்திப்பின்போது வலியுறுத்த வேண்டிய முக்கிய விஷயங்கள் தொடர்பாக முதல்வர் விஜய், உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். இதையடுத்து, அவர் பிரதமரைச் சந்திக்க புறப்பட்டுச் சென்றார்.

பிரதமர் மோடியைச் சந்தித்த முதல்வர் விஜய், அவருக்கு பூங்கொத்து கொடுத்து, சால்வை அணிவித்து மரியாதை செலுத்தினார். புதிதாக கட்டப்பட்டுள்ள சேவா தீர்த் அலுவலகத்தில் இந்தச் சந்திப்பு நடைபெற்றது.

தொடர்ந்து இருவரும் தமிழ்நாடு மற்றும் தேசிய விவகாரங்கள் குறித்து ஆலோசனை மேற்கொண்டனர். சுமார் 20 நிமிடங்கள் இந்தச் சந்திப்பு நடைபெற்றது.

இந்தச் சந்திப்பின்போது, மேகேதாட்டு அணை, இருமொழி கொள்கை, அரசுப் பள்ளிகளை மேம்படுத்துவதற்கான பிஎம்ஸ்ரீ திட்ட நிதி, தமிழகத்துக்கு நிலுவையில் உள்ள மத்திய நிதி, தமிழகத்தின் உள்கட்டமைப்பு வளர்ச்சி மேம்பாடு உள்ளிட்ட தமிழகத்தின் முக்கிய கோரிக்கைகள் அடங்கிய மனுவை முதல்வர் விஜய், பிரதமர் மோடியிடம் நேரில் வழங்கினார்.

இந்தச் சந்திப்பு நிறைவடைந்ததை அடுத்து அவர் மீண்டும் தமிழ்நாடு இல்லத்துக்கு திரும்பினார்.

பிரதமர் நரேந்திர மோடி உடனான சந்திப்பை அடுத்து, உள்துறை அமைச்சர் அமித் ஷா, நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோரையும் முதல்வர் விஜய் சந்திக்க உள்ளார்.

மேலும், இந்தப் பயணத்தின்போது காங்கிரஸ் தலைவர்கள் மல்லிகார்ஜுன கார்கே, சோனியா காந்தி, ராகுல் காந்தியையும் முதல்வர் விஜய் சந்திக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. அதோடு, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் டி.ராஜா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் பேபி ஆகியோரையும் விஜய் சந்திப்பார் என தகவல் வெளியாகி உள்ளது.

spot_imgspot_img

More like this
Related

மக்களை ஏமாற்றும் கடற்தொழில் அமைச்சர்!

யாழ்ப்பாணத்தில் காணி விடுவிப்பு தொடர்பில் இராணுவத்தினர் எந்த விதமான சாதகமான பதிலையும்...

ஆக்கிரமிப்பு இனங்கள் குறித்து எப்போதும் எச்சரிக்கை அவசியம்: பொ.ஐங்கரநேசன்

உலகம் எதிர்கொண்டுள்ள தலையாய சுற்றுச்சூழல் பிரச்சினைகளில் காலநிலை மாற்றத்துக்கு அடுத்து இரண்டாவது...

விகாரைக்குள் சிறுவனை சின்னாபின்னமாக்கிய பிக்கு: தண்டனையை உறுதி செய்த மேல்முறையீட்டு நீதிமன்றம்!

2009 ஆம் ஆண்டில் ஒரு சிறுவனைப் பாலியல் ரீதியாகத் துன்புறுத்திய வழக்கில்,...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்