குடும்பிமலையில் உள்ளூர் துப்பாக்கிகளுடன் இருவர் கைது!

Date:

மட்டக்களப்பு குடும்பிமலை வயல் பிரதேசத்தில் சட்டவிரோதமான உள்ளூர் தயாரிப்பு துப்பாக்கிகள் இரு விவசாயிகளை நேற்று திங்கட்கிழமை (25) சி.ஜ.டி யினரால் கைது செய்யப்பட்டு ஓப்படைக்கப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிசார் தெரிவித்தனர்.

குற்றப் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து சம்பவ தினமான நேற்று திங்கட்கிழமை அதிகாலையில் குடும்பிமலை வயல் பகுதியை சிஜடி யினர் சுற்றி வளைத்து முற்றுகையிட்டு சோதனை நடத்தினர்.

இதன் போது அந்த பகுதியில் ஒளித்து வைத்திருந்த சட்டவிரோதமான உள்ளூர் தயாரிப்பு துப்பாக்கிள் இரண்டை மீட்டதுடன் குடும்பிமலை வயல் வட்டானை தலைவரான 45 வயதுடையவர் மற்றும் விவசாயி ஒருவர் உட்பட இருவரை கைது செய்தனர்

இவ்வாறு கைது செய்த இருவரையும் சி.ஜ.டி யினர் ஒப்படைத்துள்ளதாகவும் இன்று செவ்வாய்க்கிழமை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக வாழைச்சேனை பொலிசார் தெரிவித்தனர்.

-கனகராஜா சரவணன்-

spot_imgspot_img

More like this
Related

இலங்கையில் முதல் Orthodox Bishop பதவியேற்பு விழா சிறப்பாக நடைபெற்றது

இலங்கை கிறிஸ்தவ வரலாற்றில் புதிய அத்தியாயமாக, ஆர்த்தடாக்ஸ் பாரம்பரிய கிறிஸ்தவ திருச்சபையின்...

சுரேஷ் சலே விவகாரத்தில் சட்டத்தின் ஆட்சி நிலைநிறுத்தப்பட வேண்டும் – முன்னாள் எம்.பிக்கள் வலியுறுத்தல்

சுரேஷ் சலே விவகாரம்: சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்துமாறு ஜனாதிபதியிடம் முன்னாள் எம்.பிக்கள்...

என்னை நோக்கிய குற்றச்சாட்டுகள் தவறான கணக்கில் வரவு வைக்கப்படுகின்றன – நாமல்

இன்றைய அரசாங்கத்தின் கீழ் பொதுமக்களின் பணம் மட்டுமன்றி, தோல்விகளுக்கான பொறுப்புகளும் குற்றச்சாட்டுகளும்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்