களுவாஞ்சிக்குடியில் மீன்பிடிக்க சென்ற இளைஞனின் சடலம் மீட்பு

Date:

களுவாஞ்சிகுடி கடலில் சிறிய படகில் மீன் பிடிக்க சென்ற 19 வயது இளைஞனா மீனவர் ஒருவர் சனிக்கிழமை இரவு சென்றவர் காணாமல் போயுள்ள நிலையில் இன்று திங்கட்கிழமை (25) காலையில் களுதாவளை பகுதி கடற்கரையில் கரையொதுங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்

களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவிலுள்ள களுதாவளை சிறி முருகன் கோவில் வீதியைச் சேர்ந்த 19 வயதுடைய விஜயகுமார் விஜயகாந்த் சம்பவ தினமான சனிக்கிழமை மாலை 6.00 மணியளவில் கடலில் மீன்பிடிப்பதற்காக சிறிய படகில் தனியாக சென்றுள்ள அவர் நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை ஆகியும் வீடு திரும்பவில்லை என உறவினர்கள் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தனர். .

இதனையடுத்து இந்த கடற்பகுதிக்கு படகில் மீனவர்கள் சென்று தேடிய போது மீனவரான விஜயகாந்த் சென்ற படகை கண்டுபிடித்த போதும் அதில் அவர் காணாமல் போய்ய நிலையில் இன்று திங்கட்கிழமை கரை ஒதுங்கிய நிலையில் சடலம் மீட்கப்பட்டு பிரேத பிசோதனைக்காக வைத்தியசாலையில் ஓப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை களுவாஞ்சிக்குடி பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

-கனகராஜா சரவணன்-

spot_imgspot_img

More like this
Related

இஸ்ரேலுடன் உறவை இயல்பாக்குமாறு முஸ்லிம் நாடுகளை வலியுறுத்தும் ட்ரம்ப்

உருவாகி வரும் ஈரான் அமைதி ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, மத்திய கிழக்கு...

காயங்களுடன் முதியவரின் சடலம்

வவுணதீவு பொலிஸ் பிரிவிலுள்ள பாவக்கொடிச்சேனை சிவன்கோவில் பாறையில் காயங்களுடன் முதியவர் ஒருவர்...

வித்தியா கொலையாளி எடுத்த விபரீத முடிவு: சடலத்தை பொறுப்பேற்க உறவினர்கள் மறுப்பு!

புங்குடுதீவு மாணவி கொலை வழக்கின் மரண தண்டனை கைதியொருவர் யாழ்ப்பாண சிறைச்சாலையில்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்