தற்போது நிலவும் கடும் காற்றுக் காரணமாக திசைமாறி வந்து நெடுந்தீவுக் கடற்பரப்பில் தத்தளித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர் ஒருவர் நெடுந்தீவு மீனவர்களால் மீட்கப்பட்டு பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
தமிழகம் இராமேஸ்வரம் இராமநாதபுரம் பகுதியைச் சேர்ந்த 56 வயதுடைய ஒருவரே இவ்வாறு இலங்கை கடற்பரப்பில் மீட்கப்பட்டு நெடுந்தீவு பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
விசாரணைகளின் பின்னர் தமிழக மீனவரை ஊர்காவற்றுறை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தவுள்ளதாக நெடுந்தீவு பொலிசார்
தெரிவித்தனர்.




