“இன்ஸ்டா ரீல்ஸ் ஆட்சியாக இல்லாமல் ரியல் ஆட்சியாக நடத்துங்கள்” – பேரவையில் விஜய்க்கு உதயநிதி அறிவுரை

Date:

“இன்ஸ்டா ரீல்ஸ் ஆட்சியாக இல்லாமல் ரியல் ஆட்சியாக நடத்துங்கள்” என தமிழக முதல்வர் விஜய்க்கு சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் அறிவுரை வழங்கியுள்ளார்.

தமிழக சட்டப்பேரவையில் கொண்டுவரப்பட்ட நம்பிக்கை வாக்கெடுப்பின் மீது பேசிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், “ஆளுங்கட்சி 4.93 கோடி வாக்குகளில் 1.72 கோடி தான் பெற்றுள்ளது. மீதமுள்ள 3.21 கோடி பேர் உங்களுக்கு எதிராக வாக்களித்துள்ளனர். 65% மக்களால் நிராகரிக்கப்பட்ட இந்த ஆட்சி மீது எங்களுக்கு மட்டுமல்ல உங்களுக்கு வாக்களித்த மக்களுக்கே கொஞ்சம் கொஞ்சமாக நம்பிக்கை குறைந்து வருகிறது.

சட்டப்பேரவைத் தேர்தலில் பெரும்பான்மை மக்கள் உங்களுக்கு வாக்களிக்கவில்லை. நம்பிக்கையின்றி முதல்வர் விஜய் 2 இடங்களில் போட்டியிட்டார். 2 இடங்களில் வெற்றி பெற்ற விஜய் ஒரு இடத்தில் ராஜினாமா செய்திருக்கிறார். ஆனால், தொகுதி மக்களுக்கு இதுவரை ஒரு நன்றி கூட தெரிவிக்கவில்லை.

திமுக கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன்தான் தவெக ஆட்சி அமைத்துள்ளது. குடியரசுத் தலைவர் ஆட்சி வந்துவிடக் கூடாது என்ற ஒரே காரணத்திற்காக மட்டுமே, அவர்கள் உங்களுக்கு வெளியில் இருந்து ஆதரவு கொடுத்துள்ளார்கள். இப்போதும் நாங்கள் திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம் என்று அவர்கள் கூறியிருக்கிறார்கள்.

உங்கள் கொள்கை எதிரி என்று சொன்ன பாஜக தலைமையிலான என்டிஏ கூட்டணியில் போட்டியிட்ட சட்டமன்ற உறுப்பினரை அந்தக் கட்சித் தலைவருக்கே தெரியாமல் உங்கள் கட்சிக்கு ஆதரவு தர வைத்திருக்கிறீர்கள்.

அந்தக் கட்சியின் தலைவர் டிடிவி இது குறித்து பேசும்போது, “ஆட்சிக்கு வருவதற்கு முன்னரே குதிரை பேரத்தில் ஈடுபடுகிறார்கள். மாற்றம் மாற்றம் என பேசினார்கள். இது மாற்றமில்லை, துர்நாற்றம்,” என சொல்லியிருக்கிறார்.

தற்போது, அதிமுக பிளவு பட்டுள்ளது. அதில் ஒரு பிரிவினர் உங்களுக்கு ஆதரவு தெரிவித்தார்கள். அதற்குப் பிறகு நடந்துதான் ட்விஸ்ட். அந்தப் பிரிவில் ஒருவரது வீட்டிற்கு புதிய சோஃபா செல்கிறது. பின்னாலேயே புதிய முதல்வரும் செல்கிறார். ‘புஷ்பா’ பட பாணியில் தான் இந்த ஆட்சி நடைபெற்று வருகிறது.

திமுக கூட்டணிக் கட்சிகள், மற்றும் சில கட்சிகளிடம் இருந்து எம்எல்ஏக்களை கடன் பெற்று ஆட்சி நடத்துகிற முதல்வர், தான் கொடுத்த போலி வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாது எனத் தெரிந்த உடனே, திமுக அரசு வளர்ச்சிக்காகப் பெற்ற கடன் குறித்து தவறான தகவல்களைக் கொடுத்து மக்களைத் திசைதிருப்பப் பார்க்கிறார். பெரும்பான்மை இல்லாத இந்த அரசு மக்களுக்கு நல்லாட்சி தரும் என்ற நம்பிக்கை இல்லை.

தமிழக மற்றும் இந்திய வரலாற்றிலேயே கட்சி தாவுவதற்கு முன்னதாகவே, அந்தக் குழுவின் தலைவர் வீட்டுக்குச் சென்று அவருக்கு இன்விடேஷன் கொடுத்ததை இந்தியாவில் யாரும் பார்த்ததில்லை. CHANGE, CHANGE-னு சொன்னீர்களே ஆனால், அதுக்கு பின்னால் EXCHANGE இருப்பதாக மக்கள் சந்தேகப்படுகிறார்கள். கூவத்தூரையே மிஞ்சும் அளவிற்கு நீங்கள் அடிக்கிற கூத்தைப் பார்க்கும்போது, இந்த அரசு எத்தனை நாட்களுக்கு நீடிக்கப்போகிறதோ என்ற ஐயம் மக்களுக்கு வரத்தொடங்கிவிட்டது.

நடப்பதையெல்லாம் பார்த்து,’பெரிய தவறை செய்துவிட்டோமோ’ என உங்களுக்கு வாக்களித்த மக்களே நினைக்கத் தொடங்கியுள்ளனர். இதை பிரதிபலிக்கும் வகையில் வாக்கெடுப்பில் பங்கேற்காமல் வெளிநடப்பு செய்கிறோம்.

மகளிர் உரிமை தொகைக்காக காத்திருக்கிறார்கள். குழந்தைகள் காலை உணவுத் திட்டத்துக்காக காத்திருக்கிறார்கள். நீங்கள் அவகாசம் கேட்டீர்கள். எடுத்துக் கொள்ளுங்கள். ஆனால், காத்திருப்பவர்களை ரொம்ப காலம் காத்திருக்க வைத்து விடாதீர்கள். இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் ஆட்சியாக இல்லாமல் ரியல் ஆட்சியாக நடத்துங்கள். மக்கள் கேட்பதும் அதைத் தான்” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

அடை மழையால் ஒருவர் பலி: 200 பேர் பாதிப்பு!

நாட்டின் பல பகுதிகளைப் பாதிக்கும் மோசமான வானிலை காரணமாக மட்டக்களப்பில் ஒருவர்...

பாடசாலைக்குள் மாணவன் கத்திக்குத்து: 5 மாணவர்கள் காயம்!

எப்பாவலை நகரிலுள்ள பிரதான அரச பாடசாலை ஒன்றில் மாணவர் ஒருவர் நடத்திய...

ஜோதிடர் ரத்தன் பண்டிட் அரசுப்பணி நியமன உத்தரவு வாபஸ்

முதலமைச்சர் விஜய்யின் சிறப்பு பணி அதிகாரியாக (அரசியல்) ரிக்கி ரத்தன் பண்டிட்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்