யாழ் கூட்டுறவு சங்கத்தில் குழப்பம்: பொலிசாரை வெளியேறுமாறு வற்புறுத்திய ஊழியர்!

Date:

யாழ் கூட்டுறவு சங்க ஊழியர்களது பணிப்புறக்கணிப்பில் குழப்பங்களை கட்டுப்படுத்தச் சென்ற பொலிசாரை ‘எமது பிரச்சினைக்கு தீர்வுகாண எம்மால் முடியும். நீங்கள் வெளியேறுங்கள்’ என்று கூறி யாழ் பொலிசாரை கூட்டுறவு உத்தியோகத்தர்கள் இருவர் வெளியேற்றிய சம்பவம் ஒன்று இன்று இடம்பெற்றது.

யாழ் கே.கே.எஸ் வீதி பண்ணை சந்தி பகுதியில் இருக்கும் யாழ் ப. நோ.கூ.சங்க தலைமை அலுவலகம் முன்பாக முகாமையாளரின் தான்தோன்றித்தனமான செயற்பாடுகளுக்கு எதிராக ஒன்றிணைந்த ஊழியர்களால் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

நீண்ட நேரமாக முன்னெடுக்கப்பட இந்த இழுபறி நிலையையடுத்து நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் மற்றும் பொலிசார் அங்கு சென்றனர்.

இளங்குமரன் MP இரு தரப்பினருடனும் பேச்சுக்களை முன்னெடுத்து போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர முயற்சித்தார்.

ஆனாலும் குறித்த போராட்டத்தை முன்னெடுத்தோர் அவ்விடத்தை விட்டு அகலாது தொடர்ந்தும் நின்று எதிர்ப்புக் காட்டிவந்ததுடன் உதவி ஊட்டுறவு ஆணையாளரிடமும் செல்ல ஆயத்தமாகி இருந்த நிலையிலேயே கடமையில் இருந்த பொலிசாரை வெளியேறுமாறு வற்புறுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Share post:

spot_imgspot_img

More like this
Related

பொலிசார் பௌத்தர்களென்பதால் தையிட்டி விகாராதிபதிக்கு பயந்து செயற்படுகிறார்கள்: எம்.ஏ.சுமந்திரன்

பொலிஸார் பௌத்தர்களாக இருப்பதனால் , பௌத்த பீடாதிபதிகளுக்கு பயந்து சட்டத்தை நடைமுறைப்படுத்த...

தையிட்டி விகாரைக்குள் சிக்கிய காணி மீட்பு விவகாரம்: 21ஆம் திகதி நீதிமன்றம் தீர்ப்பு!

தையிட்டியில் சட்டவிரோத விகாரை அமைந்துள்ள காணிக்குள் கையகப்படுத்தப்பட்டுள்ள பிரதேச சபைக்கு சொந்தமான...

நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உடன் முதல்வர் ஜோசப் விஜய் சந்திப்பு

தமிழக முதல்வராக பொறுப்பேற்றுள்ள ஜோசப் விஜய் இன்று நாம் தமிழர் கட்சியின்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்