மட்டு வாவியில் கரையொதுங்கிய இரு சடலங்கள்

Date:

மட்டக்களப்பு வாவியில் உயிரிழந்த நிலையில் தெரியாத இரு ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கிய நிலையில் வியாழக்கிழமை (07) மாலை 5.00 மணிக்கு மீட்கப்பட்டுள்ளதாக மட்டு தலைமையக பொலிசார் தெரிவித்தனர்.

மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவிலுள்ள சின்ன உப்போடை பகுதியில் உள்ள வாவியில் இரு சடலங்கள் மிதந்து கரை ஒதுங்கிய நிலையில் இருப்பதை கண்ட அப்பகுதியினர் பொலிசாருக்கு அறிவித்தனர்.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற பொலிசார் நீரில் மூழ்கி இருக்கும் இரு ஆண்களது சடலங்களை மீட்டனர்.

அதேவேளை நீதிமன்ற அனுமதியை பெற்று சடலத்தை பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலையில் ஒப்படைப்பதற்கான நடவடிக்கையை முன்னெடுத்து வருகின்றனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டு தலைமையக பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

-கனகராஜா சரவணன்-

spot_imgspot_img

More like this
Related

நெஞ்சில் கையடக்க தொலைபேசி வைத்து உறங்கிய இளைஞன் கையடக்க தொலைபேசி வெடித்து உயிரிழப்பு

கல்குடா கருங்காலிச்சோலை பகுதியில் கையடக்க தொலைபேசியை சார்ஜ் செய்தவாறு மார்பில் வைத்து...

பெருமளவு போதைப்பொருளுடன் அழகுநிலைய ஜோடி கைது!

மாத்தறையில் அழகு நிலையம் நடத்தி வரும் தம்பதியினர், சுமார் 7 கோடி...

நேபாள பெருவெள்ளம்: இதுவரை 359 பேர் உயிரிழப்பு; 800+ பேரை தேடும் பணி தீவிரம்

நேபாள வெள்ளப் பெருக்கில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 359 ஆக அதிகரித்துள்ளதாக அந்நாட்டு...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்