மனவைி விவகாரத்து கோரியதனால்  கோபத்தில்  தென்னைகளை வெட்டி வீழ்த்திய கணவன்

Date:

கிளிநொச்சி செல்வாநகர் பகுதியில் மூன்று பெண் பிள்ளைகளின் தாயான பெண்
ஒருவர் தனது கணவரிடமிருந்து விவாகரத்து கோரி நீதி மன்றில் வழக்கு தாக்கல
்செய்து வழக்கு இடம்பெற்று வருகி்ன்ற நிலையில் தனது மனைவியின் மீதுள்ள
கோபத்தால் அவரது வீட்டில் உள்ள தென்னை மரங்களை வெட்டி வீழ்த்தியுள்ளார்
கணவன்.

இச் சம்பவம் நேற்று முன்தினம் இரவு இடம்பெற்றுள்ளது என மனைவி கிளிநொச்சி
பொலீஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். இரவு வேளையில்
திருட்டுத்தனமாக காணிக்குள் வந்த கணவன் மரம் வெட்டும் இயந்திரம் மூலம்
தென்னைகளை வெட்டி வீழ்த்தியுள்ளதாக தெரிவிக்கும் மனைவி காய்க்கும்
நிலையில் தனக்கு வீட்டுத் தேவைகளை பூர்த்தி செய்து வந்த தென்னைகளையே
வெட்டி வீழ்த்தியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

ஒரு சில தென்னைகளை வெட்டி வீழ்த்தியதோடு மேலும் சில ஒரு தென்னை
வெட்டப்பட்டு ஆபத்தான நிலையில் இருப்பதாகவும் அதுவும் சற்று பலமான
காற்று வீசும் போது வீழ்ந்துவிடும் என்றும் கவலை தெரிவித்துள்ளார்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

எண்ணெய் உற்பத்தியை குறைத்த ஈரான்

அமெரிக்காவின் ஹோர்முஸ் ஜலசந்தி முற்றுகையால் ஏற்பட்ட அதிகரித்து வரும் சேமிப்பு நெருக்கடியைச்...

கிளிநொச்சியில் பிளாஸ்டிக் துப்பாக்கியுடன் மே தினத்திற்கு வந்தவர் கைது!

மே 1 அன்று கிளிநொச்சி டிப்போ சந்திக்கு அருகே நடைபெற்ற மே...

கறிவேப்பிலை பறித்தவர் உயிரிழந்தார்

யாழ்ப்பாணத்தில் நேற்று (01) கறிவேப்பிலை பறிப்பதற்காக மரத்தில் ஏறியவர் தவறி கீழே...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்