கிளிநொச்சியில் திடீர் வாகனப் பரிசோதனை

Date:

கிளிநொச்சி போக்குவரத்துப் பொலிஸ் பிரிவினரின் உதவியுடன் கிளிநொச்சி ஏ9 வீதியில் செல்லும் அனைத்து வாகனங்களும் திடீரென வாகனங்கள் பரிசோதனை செய்யப்பட்டது

கிளிநொச்சி மாவட்ட மோட்டார் போக்குவரத்து அலுவலகத்தின் தலைமை பரிசோதகர்தலைமையில் குறித்த பரிசோதரன நடைபெற்றது.

குறித்த பரிசோதனையின் போது, பேருந்துகள் பயணிகள் போக்குவரத்து சேவைகளுக்கு ஏற்ற நிலையில் உள்ளதா என்பது குறித்து சிறப்பு கவனம் செலுத்தப்பட்டது.

வீதியால் செல்வதற்கு தரமற்ற வாகனங்களுக்கு சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.

இதில் பரந்தன் மற்றும் முருகண்டி வீதி போக்குவரத்தில் ஈடுபடும் குருந்தூர சேவையான பஸ்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது .

குறித்த வாகனங்களில் உள்ள குறைபாடுகளை 14 நாட்களுக்குள் சரி செய்து, மோட்டார் வாகன ஆய்வாளரிடம் ஆய்வுக்கு சமர்ப்பிக்க வேண்டும் என பொலிஸாரால் அறிவித்தல் வழங்கப்பட்டுள்ளது

மேலும் பொது போக்குவரத்து வாகனங்களில் விபத்துகள் ஏற்படக்கூடிய வகையில் பொருத்தப்பட்டுள்ள அபாயகரமான மேலதிக உதிரிபாகங்களை அகற்றவும் சாரதிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

spot_imgspot_img

More like this
Related

பாடசாலை மாணவர்களையும் சென்றடைந்த போதைப்பொருள் – இலங்கையின் எதிர்காலத்திற்கு பெரும் ஆபத்து!

போதைப்பொருள் பாவனை நாட்டை சீரழித்து வரும் நிலையில், அது பாடசாலை மாணவர்களையும்...

சீன தயாரிப்பு லேபிள்களை ஒட்டி மோசடி: தெஹிவளையில் அம்பலமான காலணி மோசடி!

தெஹிவளை, கவ்தானாவில் உள்ள ஒரு ரகசிய காலணி உற்பத்தி மற்றும் அசெம்பிளி...

கை,கால் நடுங்க தூக்கி வரப்பட்ட மஹிந்த: மரணிக்கும் முன் நாமலை ஜனாதிபதியாக்க வேண்டுமாம்!

அனுராதபுரத்தில் நடைபெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ‘ஜன சதன’ (மக்கள் போராட்டம்)...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்