பிறந்தநாள் நிகழ்வில் முகத்தில் கேக் பூசிய தகராற்றில் 3 பேர் சுட்டுக்கொலை

Date:

உத்தர பிரதேசத்​தில் பிறந்த நாள் கொண்டாட்டத்தின் போது, முகத்​தில் கேக் பூசுவது தொடர்​பாக ஏற்​பட்ட தகராறில் 3 பேர் துப்​பாக்​கி​யால் சுட்​டுக் கொல்லப்பட்டனர்.

உத்தர பிரதேச மாநிலம் புலந்த்​சாகர் நகரின் குர்ஜா நகர் பகுதியில் சனிக்​கிழமை இரவு ஜீது சைனி என்​பவரின் பிறந்த நாள் விழா நடை​பெற்​றது. இந்த விழா​வில், சைனி​யின் முகத்​தில் அவரது நண்​பர்​கள் சிலர் கேக் பூசி​ய​தாகக் கூறப்​படு​கிறது. அப்போது இரு தரப்​பினர் இடையே கடும் வாக்​கு​வாதம் ஏற்பட்டுள்ளது. பின்​னர் ஒரு​வர் துப்​பாக்​கி​யால் சுட்​ட​தாகக் கூறப்படு​கிறது.

இது குறித்து புலந்த்​சாஹர் மாவட்ட காவல் கண்​காணிப்​பாளர் அந்​தரிக்ஷ் ஜெயின் கூறும்​போது, “துப்​பாக்​கிச் சூடு குறித்து தகவல் கிடைத்​ததும் குர்ஜா நகர் போலீ​ஸார் சம்பவ இடத்​துக்கு விரைந்​தனர். துப்​பாக்​கிச் சூட்​டில் படு​காயமடைந்த 3 இளைஞர்களை மருத்​து​வ​மனைக்​குக் கொண்டு சென்​றனர். ஆனால், அவர்​கள் ஏற்​கெனவே இறந்​து​விட்​ட​தாக மருத்​து​வர்​கள் அறி​வித்​தனர்.

தப்பி ஓடிய குற்​ற​வாளி​களைக் கைது செய்ய 6 தனிப்​படைகள் அமைக்​கப்​பட்​டுள்​ளன. குற்​ற​வாளி​களில் ஒரு​வரது பிறந்த நாளின் போது கேக் பூசி​ய​தால் ஏற்​பட்ட தகராறே இந்த கொலைக்​குக் காரணம் என்று குடும்​பத்​தினர் தெரி​வித்​துள்​ளனர். சில சந்​தேக நபர்​களை போலீ​ஸார் காவலில் எடுத்து விசா​ரித்து வரு​கின்​றனர்” என்​றார்.

spot_imgspot_img

More like this
Related

அக்கரைப்பற்று பிரதேச சபையின் புதிய உதவித் தவிசாளராக எம்.எச். சுபைதா உம்மா பதவிப் பிரமாணம்

அக்கரைப்பற்று பிரதேச சபையின் புதிய உதவித் தவிசாளராக எம்.எச். சுபைதா உம்மா...

சாய்ந்தமருதில் உணவகங்கள், வர்த்தக நிலையங்களில் சுகாதார பரிசோதனை

சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் ஜே. மதன் அவர்களின் ஆலோசனை...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்