செம்மணி புதைகுழி 3ஆம் கட்ட அகழ்வு ஆரம்பம்

Date:

செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகள் இன்றைய தினம் திங்கட்கிழமை யாழ்ப்பாண நீதவான் நீதிமன்ற நீதவான் எஸ். லெனின்குமார் முன்னிலையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

செம்மணி மனித புதைகுழியில் இதுவரையில் இரண்டு கட்டங்களாக மேற்கொள்ளப்பட்ட அகழ்வு பணிகளின் போது, 240 மனித என்புக்கூட்டு எச்சங்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் 239 என்புக்கூட்டு எச்சங்கள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் மேலும் எலும்புக்கூடுகள் அப்பகுதிகளில் காணப்படுவதால் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளை முன்னெடுக்க வேண்டும் எனவும் , அதற்காக 08 வார கால பகுதி தேவை என சட்ட வைத்திய அதிகாரி மன்றில் விண்ணப்பம் செய்ததற்கு அமைவாக மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளுக்காக நீதிமன்றினால் அனுமதி வழங்கப்பட்டது.

இந்நிலையில் பருவமழை மற்றும் காலநிலை சீரின்மை காரணமாக மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளை முன்னெடுக்க முடியாத நிலைமை ஏற்பட்டதுடன் , புதைகுழிக்குள் மழை வெள்ளமும் நிறைந்து காணப்பட்டது.

இரண்டாம் கட்ட அகழ்வு பணிகள் 45 நாட்கள் முன்னெடுக்கப்பட்டு , செப்டெம்பர் 06ஆம் திகதியுடன் நிறைவு பெற்ற நிலையில் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகள் தற்போது சுமார் 08 மாத கால பகுதிக்கு பின்னர் மீண்டும் இன்றைய தினம் திங்கட்கிழமை முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளுக்காக 2 கோடியே 10 இலட்சம் ரூபா நிதி, நிதியமைச்சினால் விடுவிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது

Share post:

spot_imgspot_img

More like this
Related

‘கணினிப் பிழை’ காரணமாக ஒப்பந்ததாரர்களுக்கு ரூ. 263 மில்லியன் தவறுதலாக அனுப்பப்பட்டதை இலங்கை வங்கி உறுதி செய்துள்ளது: நாமல்

வீதி அபிவிருத்தி அதிகார சபையின் கொடுப்பனவுகள் இரட்டிப்பாக வழங்கப்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளை...

பிறந்தநாள் நிகழ்வில் முகத்தில் கேக் பூசிய தகராற்றில் 3 பேர் சுட்டுக்கொலை

உத்தர பிரதேசத்​தில் பிறந்த நாள் கொண்டாட்டத்தின் போது, முகத்​தில் கேக் பூசுவது...

7 எம்.பி.க்கள் பாஜகவில் இணைந்த தாக்கம்: ஆம் ஆத்மியில் இருந்து எம்.பி., எம்எல்ஏ.க்கள் விலகும் அபாயம்

ஆம் ஆத்மி கட்​சி​யின் மக்​களவை உறுப்பினர்களுடன் பஞ்​சாபின் ஆளும் கட்சி எம்​எல்​-ஏக்​களும்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்