கிரிக்கெட்சபைக்கு எதிரான மனுவை திரும்பப் பெற்றார் நுவான் துஷார

Date:

2026 இந்தியன் பிரீமியர் லீக் மற்றும் பிற சர்வதேச ஃபிரான்சைஸ் லீக்குகளில் தான் பங்கேற்பதற்கு ஏதுவாக, இலங்கை கிரிக்கெட் சபை தடையில்லாச் சான்றிதழை (NOC) வழங்குமாறு உத்தரவிடக் கோரி கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவை கிரிக்கெட் வீரர் நுவான் துஷார திரும்பப் பெற்றுள்ளார்.

புதன்கிழமை (23) இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, ​​பல ஐபிஎல் போட்டிகள் ஏற்கனவே முடிவடைந்துவிட்டதாகவும், மனுதாரர் இந்த விண்ணப்பத்தைத் தொடர விரும்பவில்லை என்றும் அவரது சட்டத்தரணி நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

இந்த வாதத்தைத் தொடர்ந்து, வழக்கைத் திரும்பப் பெற நீதிமன்றம் அனுமதி வழங்கியதுடன், பின்னர் அந்த மனுவையும் தள்ளுபடி செய்தது.

Share post:

spot_imgspot_img

More like this
Related

விஜய் ஆட்சி அமைக்க விசிக ஆதரவு: தவெக பலம் 120 ஆக உயர்வு!

தவெக ஆட்சியமைக்க இடதுசாரிகள் ஆதரவளித்த நிலையில், விடுதலை சிறுத்தைகள் கட்சியும் தனது...

15 வயது சிறுமி பாலியல் அடிமையாக்கப்பட்ட குற்றச்சாட்டு: பௌத்த பிக்குவை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு!

அனுராதபுர நீதவான் நீதிமன்றம், கூறப்படும் ஒரு பாலியல் வன்கொடுமை வழக்கு தொடர்பாக,...

உள்நாட்டு துப்பாக்கியுடன் ஒருவர் கைது!

கரடியனாறு பொலிஸ் பிரிவிலுள்ள பெருவெளி வயல் பிரதேசத்தில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்