மீனவரை சித்திரவதை செய்த கடற்படை மீது நடவடிக்கை இல்லையா?

Date:

கடற்படையினரால் கணவரான மீனவரை முழங்காலில் இருத்தி அடித்து சித்திரவதை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக களுவாஞ்சிக்குடி பொலிசார் இதுவரை விசாரணை செய்யாது இழுத்தடிப்பு செய்து வருகின்றனர், எனவே ஜனாதிபதி உங்களது நல்லாட்சியை இங்கு ஒருவரும் கையாளுகின்றார்கள் இல்லை பொலிசார் பாதுகாப்பு படைக்கு ஒரு சட்டத்தையும் பொதுமக்களுக்கு ஒரு சட்டத்தையும் சொல்லுகின்றனர், ஆகவே நீதியை பெறவேண்டுமாக இருந்தால் நாங்கள் மட்டக்களப்பு உதவி பொலிஸ் மா அதிபர் காரியாலயத்துக்கு முன்னால் உண்ணாவிரதம் இருக்க போவதாக பாதிக்கப்பட்ட மீனவர் அவரது மனைவி கூட்டாக தெரிவித்தனர்.

மட்டக்களப்பு வெய்ஸ் ஒப் மீடியாவில் நேற்று சனிக்கிழமை (18) மாலையில் இடம்பெற்று ஊடக சந்திப்பில் பாதிக்கப்பட்ட மீனவர், அவரது மனைவியார் இவ்வாறு தெரிவித்தனர்.

கடந்த 5ம் திகதி செட்டிபாளையம் கடற்கரையில் கல்லடி கடற்படை முகாமைச் சேர்ந்த கடற்படை புலனாய்வு பிரிவு பொறுப்பதிகாரி தலைமையில் 6 பேர் கொண்ட குழுவினர் மீன்பிடி தொழில் ஈடுபடும் எனது கணவரை சுருக்கு வலை பாவித்து மீன்பிடித்தார் என குற்றம்சாட்டி ஈயம் வைத்திருந்தார் என கைது செய்து அங்கு 2 மணித்தியாலம் முழங்காலில் இருத்தி அடித்து சித்திரவதை செய்தனர்.

எனது கணவர் தான் ஈயம் வைத்திருந்தபோதும் குற்றத்தை ஒப்புக் கொண்டு அந்த ஈயம் மற்றும் வலைகளை ஒப்படைத்தும் பெரும் திரளான மக்கள் பார்க்க சுட்டெரிக்கும் வெய்யிலில் 2 மணித்தியாலயம் வைத்து அடித்து சித்திரவதை செய்து களுதாவளை கடற்படை முகாமிற்கு கொண்டு சென்று பல மணி நேரத்தின் பின்னர் நீதிமன்றில் ஆஜர்படுத்தி குற்றத்தை ஒப்பு கொண்டு வெளியே வந்தார்.

இதனை தொடர்ந்து சக்கரைவியாதி உள்ள கணவரை அடித்து தாக்கியதால் அவர் நோய் காரணமாக வீட்டில் இருந்துவிட்டு முடியாத நிலையல் அவர் களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலையத்தில் கடந்த 8ஆம் திகதி முறைப்பாடு செய்துவிட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் கணவன் மீது தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக சட்ட மருத்துவ அதிகாரி மருத்துவ சான்றுதல் வழங்கிய பின்னர் வைத்தியசாலையை விட்டு வெளியேறினார்.

இதனையடுத்து பொலிசார் விசாரணைக்கு 10 ம்திகதி வருமாறு கூறியதால், அங்கு அன்றைய தினம் சென்றோம் அப்போது தாக்குதல் நடாத்திய கடற்படை புலனாய்வு அதிகாரி வரவில்லை எனவே 14ம் திகதிவருமாறு தெரிவித்தனர்.

இதன் பின்னர் 14ம் திகதி பொலிஸ் நிலையத்துக்கு சென்றோம். அப்போது வேறு 3 கடற்படையினர் வந்தனர். நாங்கள் அவர்கள் தாக்கவில்லை என்றோம். உரிய அதிகாரி வாகரைக்கு இடமாற்றம் பெற்று சென்றுள்ளார் எனவே 17ம் திகதி வருமாறு தெரிவித்தனர்.

மீண்டும் 17ம் திகதி சென்றோம். அவர் பயிற்சியில் இருக்கின்றார் அவரால் வரமுடியாது 22ம் திகதி வருமாறு தெரிவித்தனர். இவ்வாறு களுவாஞ்சிக்குடி பொலிசார் இழுத்தடிப்பு செய்து வருகின்றனர். பொலிசார் நீதியை தருவார்கள் என்று இருந்தோம் அவர்களில் நம்பிக்கை இல்லாமல் போயுள்ளது.

இதன் காரணமாக நீதி கிடைக்க வேண்டி நேற்று 18 ம் திகதி மட்டக்களப்பில் உள்ள கிழக்கு மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் காரியாலயத்துக்கு சென்றோம். அங்கு சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் வெளியில் சென்றுள்ளதாக அவருக்கு பதிலாக இருந்த உயர் அதிகாரியிடம் களுவாஞ்சிக்குடி பொலிசாருக்கு எதிராக முறையிட்டோம். அப்போது அவர் நீங்கள் செய்தது பிழை அவர் அடித்தது சரிதான் அவரை நாங்;கள் கைது செய்யமுடியாது அவர் கடற்படை அதிகாரி என்பதால் நடவடிக்கை எடுக்கமுடியாது என்றார்.

எனவே இதற்கான நீதியை யாரிடம் நாங்கள் பெறுவது ஜனாதிபதி ஒரு நல்ல ஆட்சியை நடாத்துவர் என அவருக்கு வாக்களித்தோம். நீங்கள் நல்லவர். ஆனால் உங்களது நல்லாட்சியை இங்கு ஒருவரும் கையாளுகின்றார்கள் இல்லை. பொலிசார் பாதுகாப்பு படைக்கு ஒரு சட்டத்தையும் பொதுமக்களுக்கு ஒரு சட்டத்தையும் சொல்லுகின்றனர்.

ஆகவே நீங்கள் இதனை கவனத்தில் கொண்டு முழங்காலில் இருத்தி அடித்து துன்புறுத்தியதற்கு நீதி இல்லையா? எனவே சட்டத்தை கையாண்டு எங்களுக்கு நீதியை பெற்றுதரவும்.

இந்த சம்பவத்தால் எனது இரு பிள்ளைகள் அவமானத்தால் பாடசாலை செல்லமுடியது உள்ளதுடன் மன அழுத்தத்தால் உள்ளனர். எனவே எங்களுக்கு நீதி கிடைக்காவிடில் ஓர் இரு தினங்களின் பின்னர்; நாங்கள் உதவி பொலிஸ் மா அதிபர் காரியாலயத்துக்கு முன்னால் உண்ணாவிரம் இருக்கு முடிவு செய்துள்ளோம் என்றனர்.

-கனகராஜா சரவணன்-

spot_imgspot_img

More like this
Related

இன்றைய வானிலை

இன்றைய (30) வானிலை முன்னறிவிப்பை வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ளது. அதன்படி, மேற்கு, சபரகமுவ...

FIFA WC 2026 | ஜப்பானை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறியது பிரேசில்

திங்களன்று (ஜூன் 29) ஹூஸ்டனில் நடந்த விறுவிறுப்பான போட்டியில் ஜப்பானை 2-1...

FIFA WC 2026 | பராகுவே அதிர்ச்சி வைத்தியம்: ஜேர்மனியின் உலகக்கிண்ண கனவு முடிந்தது!

2026 ஃபிஃபா உலகக் கோப்பையில் ஜெர்மனியின் பயணம் ஒரு திகைப்பூட்டும் வகையில்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்