அதிரடிப்படையின் ஜீப் மோதி முதியவர் பலி

Date:

வவுணதீவு பொலிஸ் பிரிவில் உள்ள பரித்திச்சேனை சந்தியில் சைக்கிளுடன் விசேட அதிரடிப்படையின் ஜீப் வண்டி மோதி விபத்துக்குள்ளானதில் சைக்கிளில் பிரயாணித்த 67 வயது முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் நேற்று முன்தினம் சனிக்கிழமை (13) இரவு இடம்பெற்றுள்ளதாக வவுணதீவு பொலிசார் தெரிவித்தனர்.

கன்னங்குடா புதுமண்டபத்தடியைச் சேர்ந்த 67 வயதுடைய அப்புஹாமி கிருஷ்ணபாலன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளளார்.

கல்லடி விசேட அதிரடிப்படை முகாமில் இருந்து வவுணதீவு தாண்டியடி விசேட அதிரடிப்படை முகாமிற்கு சனிக்கிழமை இரவு ஜீப் வண்டி பிரயாணித்துக் கொண்டிருந்தபோது பிரித்திச்சேiனை சந்தியில் எதிரே வந்த சைக்கிளுடன் மோதி விபத்துக்கு உள்ளானதில் சைக்கிளில் பிரயாணித்த 67 வயதுடைய முதியவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

இதனையடுத்து உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக மட்டு போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டதுடன் விசே அதிரடிப்படையின் ஜீப் வண்டியை செலுத்திய சாரதியை பொலிசார் கைது செய்தனர்.

-கனகராசா சரவணன்-

spot_imgspot_img

More like this
Related

பிரான்ஸில் கத்திக்குத்து நடத்த முயன்ற இலங்கையரை சுட்டுக்கொன்ற பொலிஸ்

மே 30, சனிக்கிழமையன்று, பிரான்ஸின், பாரிஸ் நகர், போபிக்னியில் இரண்டு கத்திகளுடன்...

கசிப்பு வியாபாரி கைது!

மட்டக்களப்பு, கொக்குவில் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சுவிஸ் கிராமப் பகுதியில் சட்டவிரோத நீண்ட...

மட்டக்களப்பில் ‘சரக்கு’ விற்ற பெண் கைது!

கல்குடா பொலிஸ் பிரிவிலுள்ள யூனியன்கொலனி பிரதேசத்தில் சட்டவிரோதமாக பௌர்ணமி தினத்தில் மதுபான...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்