பிரபல பின்னணி பாடகி ஆஷா போஸ்லே காலமானார்

Date:

பிரபல பின்னணி பாடகி ஆஷா போஸ்லே மும்பையில் உள்ள மருத்துவமனை ஒன்றில் காலமானார். அவருக்கு வயது 92.

மும்பையில் உள்ள கேண்டி மருத்துவமனையில் சனிக்கிழமை மாலை உடல்நலக்குறைவால் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்நிலையில், இன்று அவர் காலமானார். உடலின் பல்வேறு உறுப்புகள் செயலிழந்த காரணத்தால் அவர் உயிரிழந்ததாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 1933 இல் மகாராஷ்டிராவில் உள்ள சங்க்லியில் அவர் பிறந்தார். சிறு வயதிலேயே தனது இசைப்பயணத்தை அவர் தொடங்கினார். பல்வேறு இந்திய மொழிகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களை அவர் பாடியுள்ளார். இதில் இசையின் பல்வேறு ஜானர்களும் அடங்கும். 1950-களில் தேசம் பரவலாக அறியப்பட்ட நட்சத்திர பாடகராக உயர்ந்தார்.

தமிழில் இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான், தேவா, வித்யாசாகர் ஆகியோரது இசையில் அவர் பாடல்களைப் பாடியுள்ளார். செப்டம்பர் மாதம் (அலைபாயுதே), ஓ பட்டர்பிளை (மீரா), செண்பகமே செண்பகமே (எங்க ஊரு பாட்டுக்காரன்), நீ பார்த்த பார்வை (ஹே ராம்) உள்ளிட்ட பாடல்கள் இதில் அடங்கும். இசையில் அவரது பங்களிப்பை போற்றும் வகையில் தாதாசாஹேப் பால்கே விருது, பத்ம விபூஷண் விருது ஆகியவை அவருக்கு வழங்கப்பட்டன.

அவரது மறைவையடுத்து திரை உலகினர், இசைத்துறையினர், பல்வேறு துறையை சேர்ந்த பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

spot_imgspot_img

More like this
Related

ஈரானுடனான ஒப்பந்தம் நெருங்கி விட்டது!

அமெரிக்காவும் ஈரானும் இன்னும் இறுதிக் கட்டத்தை எட்டவில்லை, ஆனால் தங்கள் மோதலைத்...

டெங்கு உயர் ஆபத்து மாவட்டமாக கொழும்பு அறிவிப்பு; ஒரு வார விசேட கட்டுப்பாட்டு நடவடிக்கை

டெங்கு அபாயம் அதிகரிப்பு: கொழும்பில் ஒரு வார விசேட கட்டுப்பாட்டு நடவடிக்கை கொழும்பு...

அமெரிக்கா–ஈரான் அமைதி ஒப்பந்தம் ஞாயிற்றுக்கிழமை கையெழுத்தாகுமா? உலகம் முழுவதும் எதிர்பார்ப்பு

ஜெனீவாவில் முக்கிய சந்திப்பு; ஹோர்முஸ் நீரிணை திறப்பு, பொருளாதார தடைகள் நீக்கம்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்