பாடசாலை நேரத்தில் மதுபானம் அருந்திய மாணவர்கள்

Date:

ஹல்துமுல்ல பகுதியில் உள்ள ஒரு முன்னணி பாடசாலையைச் சேர்ந்த மாணவர்கள் குழு ஒன்று, பாடசாலை நேரத்தில் மது அருந்தியதற்காக நேற்று கைது செய்யப்பட்டது. அவர்கள் அனைவரும் சுமார் 16 வயதுடையவர்கள்.

அவர்களில் ஒருவர் ஆபத்தான நிலையில் ஹல்துமுல்ல மருத்துவமனைக்கு அவசரமாகக் கொண்டு செல்லப்பட்டு, பின்னர் கவலைக்கிடமான நிலையில் தியத்தலாவ ஆதார மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். மருத்துவமனை வட்டாரங்களின்படி, அவர் மதுவின் வாசனையை மறைப்பதற்காக, ஒரு அழகு சாதனப் பொருளை அருந்திய பின்னர் மது அருந்தியுள்ளார்.

ஹல்துமுல்ல பொலிஸ் பொறுப்பதிகாரி, சம்பந்தப்பட்ட பாடசாலை அதிபர் மற்றும் மாணவர்களின் பெற்றோரை அழைத்து அடுத்தகட்ட நடவடிக்கை எடுப்பதாகக் கூறினார்.

spot_imgspot_img

More like this
Related

சீன தயாரிப்பு லேபிள்களை ஒட்டி மோசடி: தெஹிவளையில் அம்பலமான காலணி மோசடி!

தெஹிவளை, கவ்தானாவில் உள்ள ஒரு ரகசிய காலணி உற்பத்தி மற்றும் அசெம்பிளி...

கை,கால் நடுங்க தூக்கி வரப்பட்ட மஹிந்த: மரணிக்கும் முன் நாமலை ஜனாதிபதியாக்க வேண்டுமாம்!

அனுராதபுரத்தில் நடைபெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ‘ஜன சதன’ (மக்கள் போராட்டம்)...

அராலிச்சந்தி வாள்வெட்டு: நால்வர் கைது!

ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் சாட்சியமளித்துவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த இளைஞர் மீது அராலிச்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்